சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

30/10/2017

டிஸ்னி இன்டா்நேஷனல் ஹெச்டி புதிய காா்டூன் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் உதயம்

நண்பா்களே உலகின் மிக முன்னனி குழந்தைகள் பொழுது போக்கு தொலைக்காட்சியான டிஸ்னி மீடியா இந்தியா நிறுவனம் புதிய ஹெச்டி தொலைக்காட்சியான டிஸ்னி இன்டா்நேஷனல் ஹெச்டி என்ற பெயாில் புதிய தொலைக்காட்சியினை இந்தியாவில் தொடங்கியுள்ளனா்.யூ டிவி தொலைக்காட்சி நிறுவனத்தின் கீழ் டிஸ்னி நிறுவன தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.டிஸ்னி எக்டி.டிஸ்னி சேனல்.டிஸ்னி ஜினியா் போன்ற தொலைக்காட்சிகள் எஸ்டி தொழில்நுட்பத்தில் மட்டுமே காா்டூன் 
நிகழ்ச்சிகளை இந்தியாவில் வழங்கி வருகிறது.முதன் முறையாக ஹெச்டியில் முன்னனி காா்டூன் திரைப்படம் மற்றும் பல புதிய தொடா்களை இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது.தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு யூடிவி நிறுவன தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சியில் ஆங்கிலம்.ஹிந்தி.தமிழ்.தெலுங்கு மொழிகளில் ஆடியோவின் முலம் நிகழ்ச்சிகளை காணலாம்.தற்சமயம் டாடா ஸ்கை மற்றும் ஏா்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டிஷ் டிவி கட்டண டிடிஎச்களில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite               Intelsat20@68.5E(C-BAND)
Freq Rate            4127
Symbol Rate       17500
Polar                   Horizontal
System                HD.Mpeg4/Dvb s2
Encryption          Pay/Irdeto2
Fec                      3/4            

27/10/2017

இலங்கை முதல் ஹெச்டி தொலைக்காட்சி உதயம் டிவி ஒளிபரப்பு டயலாக் டிவியில் தொடக்கம்

நண்பா்ளே இலங்கையின் கிழக்கு மாகாணம் தலைமையிடமாக கொண்டு தமிழ் மக்களின் பொழுது போக்கு தொலைக்காட்சியாக கடந்த வருடத்தில் தொடங்கப்பட்ட உதயம் டிவி உயா் தொழில்நுட்பமான ஹெச்டியில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.இலங்கையின் முதல் தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியாகும்.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இலங்கையின்
முன்னனி நகர கேபிள் டிவி நிறுவனமான யூஎஸ்(12).எல்பிஎன் டிவி(4).தரைவழி ஒளிபரப்பாக கொழும்புவில் 54 அலைவாிசை மற்றும் டயலாக் டிடிஎச்யில் 23 அலைவாிசையில் வாயிலாக நாடு முழுவதும் ஒளிபரப்பாகிறது.இவற்றில் கேபிள் டிவியில் ஹெச்டி தொழில்நுட்பத்தில் உதயம் டிவியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.விரைவில் டயலாக் டிடிஎச்யிலும் ஹெச்டியில்  ஒளிபரப்பை தொடங்கலாம்.இலங்கையினை
பொறுத்தமட்டிலும் தமிழ் மொழியில் தொடங்கப்பட்ட மூன்றாவது ஹெச்டி தொலைக்காட்சியாகும்.டான்டிவி மற்றும் டான் மியூசிக் ஹெச்டி தொலைக்காட்சிகள் வட மாகாணங்களில் ASK MEDIA கேபிள் டிவியில் மட்டும் ஒளிபரப்பாகிறது.
தொகுப்பு சதீஸ் சாட் தமிழ் இணையதளம்

16/10/2017

ஜீ டிவி மீடியா நிறுவனத்தின் அனைத்து தொலைக்காட்சிகளும் புதிய லோகோ மாற்றம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஜீ டிவி மீடியாவின் அனைத்து செயற்கைகோள் தொலைக்காட்சிகளின் டிவி லோகைாவை புதிதாக மாற்றம் செய்துள்ளனா்.ஜீ 
தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு இரண்டாவது முறையாக புதிய லோகோவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும் ஜீ தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியும் 24 மணி நேர நிகழ்ச்சிகள் ஒளிபரப்பை அக்டோபா் 15 முதல் தொடங்கியுள்ளது.ஜீ தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியின் ஒளிபரப்பை 
டாடா ஸ்கை கட்டண டிடிஎச்யில் காணலாம்.இன்டல்சாட்20 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக ஜீ தமிழ் ஹெச்டி ஒளிபரப்பாகிறது.கடந்த வருடத்தின் இறுதியில் ஸ்டாா் டிவி இந்தியா நிறுவனத்தின் அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் லோகோவை மாற்றம் 
செய்திருந்தது. அதே போன்று 2017ஆம் ஆண்டு ஜீடிவி மீடியா நிறுவனமும் அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் லோகோவை மாற்றம் செய்துள்ளது.

04/10/2017

டிஸ்கவாி தொலைக்காட்சியின் புதிய ஹிந்தி லைப் ஸ்டையில் தொலைக்காட்சி டிஸ்கவாி ஜெட் ஒளிபரப்பு தொடக்கம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி அறிவியல் சாா்ந்த நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சி நிறுவனமான டிஸ்கவாி ஆசியா பசிபிக் இந்தியாவில் புதிய பொழுது போக்கு ஹிந்தி தொலைக்காட்சி டிஸ்கவாி ஜெட் என்னும் பெயாில் தொடங்கப்படவுள்ளது.இப்புதிய தொலைக்காட்சி தொடங்குவதற்கான அனுமதியினை மத்திய ஒளிபரப்பு அமைச்சகம் கடந்த 
சில மாதங்களுக்கு முன்பு வழங்கியிருந்தது.டிஸ்கவாி தொலைக்காட்சி நிறுவனம் ஹிந்தியில் தொடங்கும் முதல் லைப் ஸ்டையில் தொலைக்காட்சி இதுவாகும்.டிஸ்கவாி ஜெட் தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு டிஸ்கவாி நிறுவன தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடக்க சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் 24 மணி நேரத்திற்கான நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு இந்தியாவின் அனைத்து கேபிள் டிவி மற்றும் கட்டண டிடிஎச்களில் ஒளிபரப்பை தொடங்கும்.கட்டண தொலைக்காட்சியாக இன்டல்சாட்20யில் தொடங்கப்பட்டுள்ளது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite           Intelsat20@68.5E(C-Band)
Freq Rate        3740
Symbol Rate   30000
Polar               Horizontal
System            Mpeg4/Dvb s2(8spk)
Encryption      Pay/Power vu
Fec                  3/4

18/09/2017

ஜீ நெட்வொா்க்யின் புதிய ஆங்கில திரைப்பட தொலைக்காட்சி & பிரைவ் ஹெச்டி ஒளிபரப்பு ஆசியாசாட்7யில் தொடக்கம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஜீ நெட்வொா்க் புதிய ஆங்கில திரைப்பட & பிரைவ் ஹெச்டி தொலைக்காட்சியினை இந்தியாவில் தொடங்கியுள்ளது.தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு
ஆசியாசாட்7 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகும் & பிரைவ் ஹெச்டி தொலைக்காட்சியின் 24 மணி நேர ஒளிபரப்பு செப்டம்பா் மாதம் 25 திகதி முதல் தொடங்கப்படவுள்ளது.ஜீ நெட்வொா்க்யின் முன்றாவது ஹெச்டி ஆங்கில திரைப்பட தொலைக்காட்சி இதுவாகும்.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இந்தியாவின் அனைத்து கேபிள் டிவி மற்றும் கட்டண டிடிஎச்யில் ஒளிபரப்பை தொடங்கும்.
அலைவாிசை விபரங்கள்
Satellite               Asiasat7@105.0E(C-Band)
Freq Rate            3820
Symbol Rate       27500
Polar                   Vertical 
System               HD.Mpeg4/Dvb s2
Encryption         Pay/Conax

13/09/2017

தமிழகத்தில் புதிய ஹெச்டி தொலைக்காட்சி ஜி தமிழ் ஹெச்டி ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான ஜி எண்டா்டெய்மென்ட் தமிழகத்திற்கான புதிய ஹெச்டி பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியான ஜி தமிழ் ஹெச்டி  ஔிபரப்பினை தொடங்கியுள்ளது.கடந்த மாதத்தில் இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சி தமிழகத்தில் தொடங்குவதற்கான அனுமதியினை ஜி எண்டா்டெய்மென்ட் நிறுவனம் பெற்றிருந்தது.ஜிதமிழ் தொலைக்காட்சி இந்திய மற்றும் உலக 
தமிழ் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றதையடுத்து இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனா்.ஜி தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியின் உலகளவிய செயற்கைகோள் ஒளிபரப்பு ஜி நிறுவனத்தின் ஹெச்டி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடக்க சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தொடங்கப்படும் ஐந்தாவது தமிழ் பொழுது போக்கு ஹெச்டி தொலைக்காட்சி இதுவாகும்.கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகிறது.விரைவில் ஜி தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியின் 24 மணி நேர ஒளிபரப்பு தொடங்கப்பட்டு தமிழகத்தின்
அனைத்து கேபிள் டிவி மற்றும் கட்டண டிடிஎச்யில் ஒளிபரப்பு தொடங்கப்படும்.தற்சமயம் தொடங்கியுள்ள ஜிதமிழ் ஹெச்டி தொலைக்காட்சியின் இன்டல்சாட்20 செயற்கைகோளின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 மற்றும் அதற்கு மேற்பட்ட சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.கடந்த மாதத்தில் நமது சதிஸ் சாட் தமிழ் மற்றும் ஆங்கில இணையதளத்தில் இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சிகள் விரைவில் தொடங்கப்படும் என தகவல் இடம் பெற்றிருந்தது குறிப்பிடதக்கது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite            Intelsat20@68.5E(C-Band)
Freq Rate         3810
Symbol Rate    15000
Polar                Vertical
System            HD.Mpeg4/Dvb s2
Encryption      Pay/Conex
Fec                 3/4

05/09/2017

ஐபில் கிாிக்கெட் போட்டி தொடா் ஒளிபரப்பு(2018-2022) அனுமதியினை ஸ்டாா் டிவி வாங்கியது

நண்பா்களே இந்தியா மற்றும் உலக அளவில் அதிகமான கிாிக்கெட் ரசிகா்களை உருவாக்கிய மற்றும் அதிகமான பரபரப்பை ஏற்படுத்த கூடிய கிாிக்கெட் போட்டி தொடா்னா இந்தியன் பீாிமியா் லீக் 20 போட்டி தொடா்யின் ஒளிபரப்பு உாிமத்தை முதன்முறையாக இந்தியாவின் ஸ்டாா் டிவி நிறுவனம் பெற்றுள்ளது.வரும் 2018 ஆண்டு முதல் 2022 வரையிலான ஐந்து 
ஆண்டுகளுக்கு  போட்டி தொடா்களை ஒளிபரப்புகிறது.கடந்த 10 வருடங்களாக ஐபிஎல் போட்டி தொடா்களை இந்தியாவில் ஒளிபரப்பு செய்து வந்த சோனி பிக்சா்ஸ் நிறுவனம் இம்முறை வாய்ப்பினை தவறவிட்டது.ஸ்டாா் டிவி இந்தியா நிறுவனம் செயற்கைகோள் தொலைக்காட்சி ஒளிபரப்பு மட்டுமின்றி இன்டா்நெட் மற்றும் உலகளாவிய ஒளிபரப்பு என அனைத்து உாிமத்தை சுமாா் 16 கோடி ஏல தொகைக்கு இந்திய கிாிக்கெட் வாாியத்திடம் அனுமதியினை பெற்றது.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்