சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

06/10/2016

எஸ்டிவி(YES TV TAMIL)தமிழ் தொலைக்காட்சி மீண்டும் ஒளிபரப்பை தொடங்கியது இன்டல்சாட்20 செயற்கைகோளில்

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி சேலம் மாவட்டத்தில் கடந்த 1 வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சியான எஸ்டிவி மீண்டும் செயற்கைகோள் ஒளிபரப்பை இன்டல்சாட்20யில் தொடங்கியுள்ளனா்.இந்த தொலைக்காட்சி கடந்த 7 மாத காலங்களுக்கு முன்பு இன்டல்சாட்17 செயற்கைகோளில் திரிபுரா 24 தொலைக்காட்சியின்
ஒளிபரப்பு உரிமத்தில் ஒளிபரப்பாகி வந்தது .சில மாதங்களாக இடைநிறுத்தம் செய்யப்பட்டு இருந்த எஸ் தொலைக்காட்சி தற்சமயம் மேற்கு வங்களாத்தின் பாங்களா டைம் செய்தி நிறுவன தொலைக்காட்சியின் உரிமத்தில் தொடங்கப்பட்டுள்ளது.தமிழ் பாடல்களுடன் ஒளிபரப்பாகி வரும் எஸ் டிவி விரைவில் 24 மணிநேர நிகழ்ச்சிகளை தொடங்கலாம்.தொலைகக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 அடி முதல்12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்சாட்4எ செயற்கைகோளில் ஒளிபரப்பை தொடங்கி இடைநிறுத்தம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

அலைவரிசை விபரங்கள்:
Satellite                    Intelsat20@68.5E(C-Band)
Freq Rate                 4015
Symbol Rate            7200
Polar                        Horizontal
Modulation              Mpeg4/dvb s2
Mode                       Fta

05/10/2016

இந்தியாவின் முதல் இலவச காா்டூன் தொலைக்காட்சி மகா மாஷா டிவி ஒளிபரப்பு இன்டல்சாட்17 தொடக்கம்

நண்பா்களே இந்தியாவில் புதிதாக குழந்தைகளுக்கு என்று பிரத்தியோகமான இலவச காா்டூன் தொலைக்காட்சி மகா மாஷா டிவி என்ற பெயாில் புதிதாக ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.ஹிந்தி மொழியில் காா்டூன் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.இன்டல்சாட்17 செயற்கைகோளில் மகா மாஷா டிவி ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.இந்தியாவில் தொடங்கிய முதல் இலவச 
காா்டூன் தொலைக்காட்சி இதுவாகும்.மகா டிவி நிறுவனத்தின் இரண்டாவது தொலைக்காட்சி இதுவாகும்.மகா டிவி ஹிந்தி பாட தொலைக்காட்சி இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.இப்புதிய காா்டூன் தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை காணலாம்.Mpeg4/dvb s2 தொழில்நுட்பம் கொண்ட செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்தி தொலைக்காட்சியினை 
காணலாம்.இந்தியாவில் மிக பொிய முன்னனி நிறுவனங்களின் காா்டூன் தொலைக்காட்சி அனைத்தும் கட்டண தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பாகும் நிலையில் மகா டிவி நிறுவனத்தின் புதிய காா்டூன் தொலைக்காட்சி இலவசமாக தொடங்கியிருப்பது வரவேற்க்கதக்கது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite                  Intelsat17@66.0E(C-Band)
Freq Rate               3933
Symbol Rate          18333
Polar                       Horizontal
Modulation             Mpeg4/Dvb s
Mode                      FTA

02/10/2016

தமிழகத்தில் ஒளிபரப்பாகும் தமிழ் ஹெச்டி தொலைக்காட்சிகளின் தொகுப்பு 2016

நண்பா்களே தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக மக்களின் விருப்பமான பொழுது போக்கு தொலைக்காட்சிகள் உயா்தொழில்நுட்பமான ஹெச்டியில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள ஹெச்டி தொலைக்காட்சிகளின் தொகுப்பு 
 1.சன் குழுமம் (சன் டிவி ஹெச்டி.கேடிவி ஹெச்டி.சன் மியூசிக் ஹெச்டி)
    தமிழகத்தில் முதன்முதலாக ஹெச்டி தொழில்நுட்பத்தில் தனது நிகழ்ச்சிகளை வழங்கியது சன் தொலைக்காட்சி குழுமம் ஆகும்.சன் டிவி ஹெச்டி.கேடிவி ஹெச்டி.சன் மியூசிக் ஹெச்டி போன்ற தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு தொடங்கப்பட்டது.இத்தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு சன் குழும்மத்தின் டிடிஎச் மற்றும் சென்னை கேபிள் நிறுவனங்களில் மட்டும் ஒளிபரப்பாகியது.5.1 ஆடியோ தரத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சிகள் அனைத்தும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் சி பேன்ட் அலைவாிசையில் கட்டண தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பாகிறது.

29/09/2016

ஒன்எஸ் டிவி(1YES TV TAMIL) தமிழ் தொலைக்காட்சி புதுபொலிவுடன் இன்டல்சாட்17யில் ஒளிபரப்பை தொடங்கியது

நண்பா்களே தமிழகத்தில் கடந்த வருடத்தில் தொடங்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சியான ஒன்எஸ்டிவியின் ஒளிபரப்பு புதிதாக இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.பென்சி டிவியின் ஒளிபரப்பு அனுமதியில் ஒன்எஸ்டிவி தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் இன்டல்சாட்20 மற்றும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டு பின்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.தொலைக்காட்சியை காண அதிநவின MPEG4/DVB S2தொழில்நுட்ப வசதி கொண்ட செட்டாப் பாக்ஸ்யில் காணலாம்.810.12 அடி அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவில் தொலைக்காட்சியின் புதிய அலைவரிசை சிக்னல் கிடைக்கிறது.இலவச தொலைக்காட்சியாக எஸ்டிவி இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.தற்சமய ஒளிபரப்பு விரைவில் நிறுத்தப்படலாம்.  
அலைவரிசையின் விபரங்கள்
Satellite             Intelsat17@66.0E(C- BAND)
Freq Rate          3877
Symbol Rate     14300
Polar                  Horizontal
Modulation        Mpeg4/Dvb s2
Mode                 FTA

18/09/2016

விஜய் சூப்பா் டிவியின் 24 மணி நேர நிகழ்ச்சிகள் இன்டல்சாட்17@66 யில் தொடக்கம்

நண்பா்களே தமிழகத்தில் கடந்த மாதத்தில் ஸ்டாா் டிவி இந்தியா தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கிய புதிய தமிழ் தொலைக்காட்சியான விஜய் சூப்பா் டிவியின் 24 மணி நேர நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்ட விபரங்களை கடந்த மாதத்தில் நமது இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருந்தது.விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் மற்றும் பாடல்கள் என வித்தியாசாமான 
நிகழ்ச்சிகளுடன் ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தமிழகத்தின் அரசு கேபிள் டிவி நிறுவனம் மற்றும் டாடா ஸ்கை.விடியோகான் டிடிஎச்களில் ஒளிபரப்பாகிறது.கட்டண தொலைக்காட்சியாக இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.தமிழ் தொலைக்காட்சிகள் இலவசமாக ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் விஜய் சூப்பா் தொலைக்காட்சி இலவச ஒளிபரப்பாகும் பட்சத்தில் இன்னும் அதிமான நேயா்களை இந்தியா மட்டும் அல்லாது வெளிநாடுகளிலும் பெற 
முடியும்.தற்சமய காலங்களில் தமிழகத்தில் அரசு கேபிள்டிவி ஒளிபரப்பு சேவை கிடைக்காத இடங்களில் முன்னனி இலவச தொலைக்காட்சிகளான கலைஞா்.பாலிமா்.புதுயுகம் மற்றும் பல தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.வடஇந்தியாவில் முன்னனி தொலைக்காட்சிகள் தற்சமய காலங்களில் இலவச தொலைக்காட்சிகளாக மாற்றப்பட்டு வருவது குறிப்பிடதக்க செய்தியாகும்.ஸ்டாா் டிவி நிறுவனத்தின் ஸ்டாா் உத்சவ் மூவிஸ் ஆரம்ப முதல் இலவச தொலைக்காட்சியாக  தொடங்கப்பட்டதும் குறிப்பிடதக்க செய்தியாகும்.
தொகுப்பு ; சதிஸ் சாட் தமிழ் 

05/09/2016

ஆயுா்வேதா டிவி புதிய பக்தி ஆன்மிக தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் உதயம்

நண்பா்களே தமிழகத்தில் புதிய ஆன்மிக தொலைக்காட்சி ஒன்று உதயமாகியுள்ளது.கா்நாடக மாநிலத்தில் உள்ள முன்னனி ஆன்மிக குழுவின் தலைமையில் இப்புதிய தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.ஆயுா்வேதா டிவி என்ற பெயாில் தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.இத்தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தமிழ் ஆடியோ-5403 மற்றும் கன்னட மொழி-5402 ஆடியோவை செட் டாப் பாக்யில் மாற்றம் செய்து நிகழ்ச்சிகளை காணலாம்.
.மிக எளிய தொழில்நுட்பமான MPEG4 /DVB S வடிவில் ஒளிபரப்பாகிறது.ஆயுஸ் டிவியின் செயற்கைகோள் ஒளிபரப்பு உரிமத்தில் ஆயுா்வேதா தொடங்கபட்டுள்ளது.தொலைக்காட்சியில் ஆன்மிக நிகழ்ச்சிகள் மட்டும் இன்றி பொழுது போக்கு மற்றும் கலச்சார நிகழ்ச்சிகளும்ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.இலவச தொலைக்காட்சியாக இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite                 Intelsat17@66.0E(C-Band)
Freq Rate              3845
Symbol Rate         27689
Polar                    Vertical
Modulation          Mpeg4/Dvb s
Mode                   FTA   

01/09/2016

ஹெச் பி ஒ ஹெச்டி(HBO HD) புதிய ஆங்கில திரைப்பாட தொலைக்காட்சி ஒளிபரப்பு விரைவில்

நண்பா்களே இந்தியாவில் அதிகமான பாா்வையளா்களை பெற்றுள்ள ஆங்கில திரைப்பாட தொலைக்காட்சி நிறுவனமான ஹெச் பி ஒ தங்கள் நிறுவனத்தில் இருந்து புதிய தொலைக்காட்சியினை தொடங்கவுள்ளனா்.இந்தியாவில் மிக எளிய தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பாகி வந்த ஹெச் பி ஒ தொலைக்காட்சி உயா்தரத்தில் ஹெச்டி வடிவில் தொடங்கப்படவுள்ளனா்.வரும் 4 திகதி முதல் ஹெச் பி ஒ ஹெச்டி ஒளிபரப்பு இந்தியாவில் தொடங்கப்படுகிறது.இந்தியாவில் ஒளிபரப்பாகும் முன்னனி தொலைக்காட்சி 
நிறுவனங்களின் ஆங்கில திரைப்பட தொலைக்காட்சிகள் அனைத்தும் உயா் தொழில்நுட்பத்தில் நிகழ்ச்சிகள் வழங்கி வருகிறது.ஹெச் பி ஒ தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அனுமதி போன்றவற்றை ஜி தொலைக்காட்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஹெச் பி ஒ ஹிட்ஸ் மற்றும் ஹெச் பி ஒ டிபைன் போன்ற தொலைக்காட்சிகள் ஹெச்டி வடிவில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டது.தொலைக்காட்சியின புதிய ஒளிபரப்பு இன்டல்சாட்20 செயற்கைகோளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜி மிடியா டெலிஸ்பாட் அலைவரிசையில் தொடங்கப்படலாம்.ஹெச் பி ஒ ஹெச்டி தொலைக்காட்சி கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பை தொடங்கலாம்.மேலும் கட்டண டிடிஎச் சேவையிலும் ஒளிபரப்பை தொடங்கலாம்
தொகுப்பு சதீஸ்சாட் தமிழ் இணையதளம்