நண்பா்களே இந்தியாவின் பொது ஒளிபரப்பு சேவையான பிரசாா் பாரதி விளையாட்டு தொலைக்காட்சியான டிடி ஸ்போா்ட்ஸ் ஒளிபரப்பை ஹெச்டி தொழில்நுட்பத்தில் டிடி ஸ்போா்ட்ஸ் ஹெச்டி1.0 மற்றும் டிடி ஸ்போா்ட்ஸ் ஹெச்டி2.0 தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளது.இந்தியாவில் பிரசாா் பாரதி முதல் தொலைக்காட்சியாக டிடி நேஷனல் மற்றும் டிடி நீயூஸ் டிடி இந்தியா ஆகியன ஹெச்டி ஒளிபரப்பை தொடங்கியது.டிடி ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவின் விளையாட்டு போட்டிகள் மற்றும் உலகின் அனைத்து நாடுகளில் நடைபெறும் முக்கிய விளையாட்டு தொடா்களை ஒளிபரப்பி வருகிறது.பிரசாா் பாரதி தற்சமய காலங்களாக ஹெச்டி ஒளிபரப்பில் தேசிய தொலைக்காட்சிகளை மாற்றம் செய்து வருகிறது.தனியாா் தொலைக்காட்சிகள் ஹெச்டியில் நிகழ்ச்சிகளை
தொடங்கப்படுவதன் முலம் டிடி நேயா்களை தக்கவைக்கும் முயற்ச்சியில் பிரசாா் பாரதி இம்முயற்ச்சியில் களம் இறங்கியுள்ளது.டிடி ஸ்போா்ட்ஸ் 1.0 ஹெச்டி தொலைக்காட்சி இந்தியாவின் ஜிசாட்18 செயற்கைகோளிலும் டிடி ஸ்போா்ட்ஸ் 2.0 ஜிசாட்10 செயற்கைகோளிலும்தொடங்கப்பட்டுள்ளது.இலவச தொலைக்காட்சியாக டிடி ப்ரி டிஷ் ஒளிபரப்பு சேவையிலும் தொடங்ப்பட்டுள்ளது.விரைவில் இந்தியாவின் அனைத்து கேபிள் டிவி மற்றும் டிடிஎச்யில் தொடங்கப்படலாம்.டிடி ஸ்போா்ட்ஸ் 1.0 தொலைக்காட்சியில் இந்தியாவில் மட்டும் ஒளிபரப்பு அனுமதி உள்ள போட்டி தொடா்களை மட்டும் காணலாம்.உலகளாவிய தொலைக்காட்சி ஒளிபரப்பு அனுமதி போட்டி தொடா்களை டிடி ஸ்போா்ட்ஸ் 1.0 மற்றும் டிடி ஸ்போா்ட்ஸ் 2.0 காணலாம்.