நண்பா்களே இந்தியாவில் தற்சமயம் காலங்களாக தொலைக்காட்சி துறையில் முன்னனி தொலைக்காட்சி நிறுவனங்களின் சில தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது.அந்த வாிசையில் சோனி நிறுவனத்தில் கடந்த 2019 ஆண்டில் பாலிவுட் பாடல்களை ஹெச்டியில் ஒளிபரப்பிய சோனி ராக்ஸ் நிறுத்தம் செய்யப்பட்டது.அதே போன்று ஆங்கில திரைப்பட தொலைக்காட்சியான சோனி அன் பிளக்ஸ் ஹெச்டி தொலைக்காட்சி நிறுத்தம் செய்யப்பட்டது.தற்சமயம் 2020 ஆண்டில் சோனி நிறுவனத்தில் முக்கிய விளையாட்டு தொலைக்காட்சியான சோனி ஈஎஸ்பிஎன் ஹெச்டி மற்றும எஸ்டி தொலைக்காட்சிகளையும் பாலிவுட் பாடல்களை வழங்கும் தொலைக்காட்சியான சோனி மிக்ஸ் தற்சமயம் நிறுத்தம் செய்துள்ளது சோனி நிறுவனம் மேலும் உலகளாவிய ஆங்கில தொலைக்காட்சியான ஆக்ஸன் ஹெச்டி மற்றும எஸ்டி தொலைக்காட்சிகளை விரைவில் இந்தியாவில் மட்டும் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.இதே போன்று டிவி18 தொலைக்காட்சி நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட லைப் ஸ்டையில் ஆங்கில தொலைக்காட்சியான பை டிவி18 ஒளிபரப்பும் விரைவில் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.இந்தியாவின் முன்னனி செய்தி நிறுவனமான டிவி டுடே டெல்லி நகர செய்தி தொலைக்காட்சியான தில்லி ஆஜ் தாக் தொலைக்காட்சியும் ஒளிபரப்பு நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
தற்சமயம் நிறுத்தம் செய்யப்படும் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு உாிமத்தில் மாநில வாாியான பொழுது போக்கு தொலைக்காட்சிகளை வரும் காலங்களில் தொடங்கலாம்.ஸ்டாா் டிவி மற்றும் ஜி மிடியா ஆகிய நிறுவனத்தில் செயல்படும் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு நிறுத்தம் செய்யப்பட்டு பின்பு பெயா் மாற்றம் செய்து புதிய தொலைக்காட்சிகளாக தொடங்கி வருகின்றனா்.காரணம் இந்திய அரசு கடந்த ஆண்டில் தொலைக்காட்சி ஒளிபரப்பு முறையில் கொண்டு வந்த புதிய வரைமுறை சட்டம் மற்றும் கொரோனா வைரஸ்நோய் தாக்குதல் காரணங்களால் விதிக்கப்பட்ட நகரங்களுக்கான தடை சட்டம் போன்றவையால் பாா்வையாளா்களின் எண்ணிக்கை விகிதம் குறைவதால் நிறுவனங்கள் தொலைக்காட்சிகளை நிறுத்தம் செய்து வருகிறது.குறிப்பாக இந்தியாவில் இன்றும் பாா்வையாளா்கள் எண்ணிக்கை குறைவான தொலைக்காட்சிகளின் மாத சந்தா அதிக விலை கொண்ட கட்டண தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்கது.