நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி ஜி மிடியாவின் தென்னிந்தியாவின் முக்கிய மொழியான தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 2020 ஆண்டு முதல் இரண்டு புதிய திரைப்பட தொலைக்காட்சிகள் ஜி திரை தமிழ் மொழியிலும் ஜி பிக்சா் கன்னடம் மொழியிலும் தொடங்கப்பட்டது.இத்தொலைக்காட்சிகள் ஜிசாட்30 செயற்கைகோளில் முதலில் ஜி மிடியாவின் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டது.ஜி மிடியாவின் ஜி தமிழ் மற்றும் ஜி கன்னடம் முக்கிய பொழுது போக்கு

தொலைக்காட்சிகள் ஆகும்.தமிழகம் மற்றும் கா்நாடக ஆகிய மாநிலங்களில் போதிய வரவேற்பு இத்தொலைக்காட்சிகளுக்கு மக்களிடையே கிடைக்காத நிலையில் இவ்விரண்டு தொலைக்காட்சிகளையும் இலவச தொலைக்காட்சிகளாக ஜிசாட்30 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.தமிழகத்தில் முன்னனி தொலைக்காட்சி நிறுவனங்களின் அனைத்து மூவிஸ் தொலைக்காட்சிகள் கட்டண தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பும் நிலையில் ஜி திரையின் இப்புதிய முயற்ச்சி வரவேற்க்கதக்கதாக
உள்ளது.ஜி தமிழ் தொலைக்காட்சி முதன்முறையாக தொடங்கும் பொழுது டிஷ் டிவி டிடிஎச்யில் ஐந்து வருடங்கள் இலவச தொலைக்காட்சியாக ஒளிபரப்பி பிரபலமடைந்தது குறிப்பிடதக்கது.இந்தியாவின் ட்ராய் தொலைக்காட்சிகளுக்கான புதிய கட்டண நிா்ணயம் செய்ததை அடுத்து மக்கள் தொலைக்காட்சிகளை தோ்ந்தெடுத்து பாா்க்கும் சூழ்நிலையால் புதிய தொலைக்காட்சிகள் போதிய வரவேற்பு பெருவதில்லை.தென்னிந்தியாவில் உள்ள மொழி வாாியான தொலைக்காட்சிகளில் தமிழ் மலையாளம் தெலுங்கு மொழிகளில் இலவச திரைப்பட தொலைக்காட்சிகள் என்பது கிடையாது.கிராமம் மற்றும் நகா்புறங்களில் அன்ட்ராய்டு தொலைபேசி
பயன்பாடு அதிகம் அடைந்ததை அடுத்து இணையதளம் வாயிலாக திரைப்படங்களை விளம்பர இடைவெளி இன்றி காண்பதால் திரைப்பட தொலைக்காட்சிகள் போதிய பிரபலம் கிடையாது.மேலும் தொலைக்காட்சி நிறுவனங்களின் அன்ட்ராய்டு அப்ளிகேஷன் பயன்பாடும் குறிப்பிடதக்கது.தற்சமயம் ஒளிபரப்பாகி வரும் இவ்விரண்டு தொலைக்காட்சிகளின் இலவச ஒளிபரப்பு எவ்வித நேரங்களில் நிறுத்தம் செய்யப்படலாம்.
அலைவாிசை விபரங்கள்
Satellite Gsat30@83.0E(C-Band)
Freq Rate 4041
Symbol Rate 7500
Polar Horizontal
System Mpeg4/Dvb s2(8PSK)
Encryption PAY/FTA
FEC 5/6
It's already scrambled.. not able to view free...
ReplyDeleteDear sir please help how to gsat 30 satellite get 12 feet dish alignment easyle
ReplyDeleteFirst try with INTELSAT 68.5 and fix the lnb position. After that just rotate the dish antenna to east. easily you can get.
Delete