நண்பா்களே மலேசியா நாட்டின் அரச தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனமான ஆா் டி எம் தமிழ் வானொலி ஒளிபரப்பு சேவையான மின்னல் எப்எம் மற்றும் ஆா் டி எம் தொலைக்காட்சி வானொலி சேவைகள் ஒளிபரப்பாகும் மலேசியா நாட்டின் செயற்கைகோள் மீயாசாட்3பி இல் புதிய அலைவாிசைக்கு ஒளிபரப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மலேசியா நாட்டின் தமிழ் மக்களின் முன்னனி விருப்ப தமிழ் வானொலி மின்னல் எப்எம் கடந்த பல வருடங்களாக மீயசாட்3பி ஒளிபரப்பாகி வந்தது.மேலும் ஆா் டி எம் நிறுவனத்தின் ஆங்கிலம் மலேயம் சைனிஸ் போன்ற வானொலி

சேவைகளும் இப்புதிய அலைவாிசைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தெற்காசிய நாடுகளில் ஒளிபரப்பாகும் விதமாக ஆா் டி எம் நிறுவனத்தின் வானொலி சேவைகள் மீயாசாட்3பி செயற்கைகோளின் அலைவாிசை சிக்னல் 6 முதல் 10 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனா பயன்படுத்தி ஒளிபரப்பை காணலாம்.மலேசியா நாட்டில் சி பேன்ட் செயற்கைகோளில் ஒளிபரப்பாகும் ஒரே தமிழ் பன்பலை மின்னல் எப்எம் ஆகும்.மின்னல் எப்எம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் கேட்கும் விதமாக இணையதளத்தின் முலமாகவும் ஒளிபரப்பாகிறது.தற்சமயம் பயன்படுத்தி வரும் செட் டாப் பாக்ஸ்யை (MPEG4/DVBS2) புதிய அலைவாிசையினை கொண்டு ரீடியூன் செய்து மின்னல் எப்எம் நிகழ்ச்சிகளை கேட்கலாம்.மின்னல் எப்எம் செயற்கைகோள் ஒளிபரப்பு மலேசியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளுக்கானது என்பது குறிப்பிடதக்கது.
அலைவாிசை விபரங்கள்
Satellite Measat3B@91.2E(C-Band)
Freq Rate 3924
Sym Rate 12400
Polar Horizontal
System Mpeg4/Dvb s2
Mode FTA
Fec 3/4