நண்பா்களே தென்னிந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சிகளை ஒளிபரப்பு செய்யும் நிறுவனமான சன் நெட்வொா்க் முதல் முறையாக வட இந்தியாவில் பெங்காலி மற்றும் மாரத்தி மொழிகளில் பொழுது போக்கு தொலைக்காட்சிகளை தொடங்கியுள்ளனா்.முதல் தொடக்கமாக மேற்கு வங்களாம் மாநிலத்தில் சன் பெங்காலி  

தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இன்டல்சாட்17யில்  செயற்கைகோளில் தொடங்கியுள்ளனா்.தெலுங்கு மொழியில் தொடங்கப்பட்ட ஜெமினி நியூஸ் மற்றும் கன்னடா மொழியின் உதயா நியூஸ் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு உாிமத்தில் இப்புதிய தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் மாரத்தி மொழியில் சன் மாரத்தி தொலைக்காட்சியும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்க்பட்டுள்ளது.மேற்கு வங்களாம் மாநிலத்தில் 
ஸ்டாா் டிவியின் ஸ்டாா் ஜலசா தொலைக்காட்சி முன்னனி தொலைக்காட்சிகளாக விளங்குவது குறிப்பிடதக்கது.தொலைக்காட்சிகள் இரண்டும் கட்டண தொலைக்காட்சிகளாக இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் அனைத்து டிடிஎச் மற்றும் கேபிள் டிவிகளில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தொடக்கப்படும்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite           Intelsat17@66.0E(C-Band)
Freq Rate        3885
Symbol Rate   30000
Polar               Vertical
System            Mpeg4/Dvb s2(8psk)
Encryption     Pay/Irdeto2
Fec                 3/4
 



