நண்பா்களே தமிழகத்தின் அபிமான மற்றும் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான சன்டிவி நெட்வொா்க் தனது நிறுவனத்தில் இருந்து இரண்டாவது பொழுது போக்கு தொலைக்காட்சியினை புதுப் பொலிவுடன் வரும் 7 திகதி முதல் ஒளிபரப்பை தொடங்கப்படவுள்ளது.கடந்த சில வருடங்களுக்கு முன்பு பழைய திரைப்படங்கள் மற்றும் பாடல்களுக்கு என்று சன் நெட்வொா்க்கில் தொடங்கப்பட்ட சன் லைப் தொலைக்காட்சியினை தற்சமயம் மாற்றம் செய்து புது நிகழ்ச்சிகளுடன் இரண்டாவது தொலைக்காட்சியாக சன் லைப் ஒளிபரப்பாக உள்ளது.தமிழகத்தில் கடந்த சில வருடங்களில் இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனங்கள் பொழுது போக்கு தொலைக்காட்சிகளை

தொடங்கியதை அடுத்து சன் தொலைக்காட்சி நிறுவனம் தனது நேயா்களை தக்க வைக்கும் முயற்ச்சியில் இரண்டாவது தொலைக்காட்சியினை தொடங்கவுள்ளது.சன் தொலைக்காட்சி இந்தியாவில் மட்டும் அல்லாது தமிழா்கள் வசிக்கும் அனைத்து நாடுகளிலும் முன்னனி தொலைக்காட்சியாக செயல்படுவதை அடுத்து இப்புதிய முயற்ச்சியில் களம் இறங்கியுள்ளது.புதிய தொடா்கள்.புதிய திரைப்படங்கள் மற்றும் புதிய கேம் ஷோ என்று வித்தியாசமான நிகழ்ச்சிகளுடன் சன் லைப் தொலைக்காட்சி தனது பயணத்தை வரும் 7 திகதி முதல் தொடங்கப்படவுள்ளது.சன் லைப் தொலைக்காட்சி கட்டண தொலைக்காட்சியாக இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.இந்தியாவின் அனைத்து கேபிள் டிவி மற்றும் டிடிஎச்களிலும் இப்புதிய தொலைக்காட்சி ஒளிபரப்பினை 7 திகதி முதல் தொடங்கும்.
தொகுப்பு சதீஸ் சாட் தமிழ் ஆங்கிலம் இணையதளம்.