நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு டிடிஎச் நிறுவனமான விடியோகான் திரை உலகம் என்ற பெயாில் புதிய தமிழ் திரைப்பட தொலைக்காட்சியினை வாிசை எண் 601யில் தொடங்கியுள்ளது.24 மணி நேர தமிழ் திரைப்பட தொலைக்காட்சியினை முதன் முறையாக விடியோகான் டிடிஎச் நிறுவனம் தமிழ் மொழியில் தொடங்கியுள்ளது.இப்புதிய திரைப்பட தொலைக்காட்சியின் சேவையினை பெற தற்சமயம் கட்டணம்
செலுத்தியுள்ளவற்றில் இருந்து மேலும் 20 ரூபாயில் இருந்து 30 என்ற கட்டணம் செலுத்தி தொலைக்காட்சியின் சேவையினை பெறலாம்.இத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு எஸ்டி 2 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கியுள்ளனா்.இதே போன்று ஏா்டெல் டிஜிட்டல் டிவி டிஎச்யில் தங்கத்திரை என்ற தொலைக்காட்சியினையும்.சன் டிடிஎச்யில் சினிமா கிளப் என்ற தொலைக்காட்சிகளும் தமிழ் திரைப்பட தொலைக்காட்சி சேவையினை வழங்கி வருகிறது.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் & ஆங்கில இணையதளம்