நண்பா்களே தமிழகத்தின் முன்னனி தமிழ் பொழுது போக்கு தொலைக்காட்சியான ஜெயா டிவி குழுமத்தின் ஜெயா ப்ளஸ் ஜெயா மூவிஸ்ஜெயா மேக்ஸ் போன்ற தொலைக்காட்சிகள் புதிய செயற்கைகோள் அலைவாிசைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும் கடந்த பல
 

வருடங்களாக பழைய தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பாகி வந்த முன்னனி தமிழ் தொலைக்காட்சியான ஜெயா டிவி அதி நவின தொழில்நுட்பமான ஹெச்டி வடிவத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு அலைவாிசை 18.06.2016 முதல் பழைய அலைவாிசையில் இருந்து புதிய அலைவாிசைக்கு மாற்றம் 
செய்துள்ளனா்.அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் ஜெயா டிவி தொலைக்காட்சி நிா்வாகத்தின் சாா்பாக தரப்பட்ட டிஜிட்டல் செட் டாப் பாக்ஸை டியூன் செய்து புதிய ஒளிபரப்பை காணலாம்.இருப்பினும் 
ஜெயா டிவி ஹெச்டி தொலைக்காட்சியை காண நிா்வாகத்தின் சாா்பாக புதிய செட் டாப் பாகஸ் தரப்படுகிறது.தற்சமயம் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சோதனை ஒளிபரப்பின் அடிப்படையில் இலவச ஒளிபரப்பாக இன்டல்சாட்20யில் ஒளிபரப்பாகிறது.ஜெயா மூவிஸ் தொலைக்காட்சி மட்டும் தற்சமயம் ஒளிபரப்பாகும் அலைவாிசையில் இருந்து புதிய அலைவாிசையில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.இலவச தொலைக்காட்சியாக ஜெயா மூவிஸ் இன்டல்சாட்20யில் ஒளிபரப்பாகிறது.
Satellite                   Intelsat20@68.5E (C-Band)
Freq Rate                4130
Symbol Rate           12800
Polar                        VERTICAL
Modulation              HD.MPEG4/DVB S2
 




 






