நண்பர்களே தமிழகத்தில் மேலும் இரண்டு புதிய தமிழ் தொலைக்காட்சிகள் உதயமாகவுள்ளது.தமிழகத்தின் முன்னனி நாளிதழ் மாலை முரசு நிறுவனத்தின் சார்பாக மாலை முரசு டிவி தொடங்கப்படவுள்ளது.இப்புதிய தொலைக்காட்சிக்கான தொழில்நுட்ப மற்றும் நிருபர் தேர்வு நடைபெறுகிறது.விரைவில் மாலைமுரசு தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு தொடங்கலாம்.தமிழகத்தில் நாளிதழ் மற்றும் செய்திப்பிரிவு நிறுவனத்தின் சார்பாக தமிழ் செய்திகள் தொலைக்காட்சி தற்சமய காலங்களில் தொடங்கப்படுகிறது.

மதிமுகம் புதிய தமிழ் தொலைக்காட்சி விரைவில் தமிழகத்தில் தொடங்கப்படவுள்ளது.தொலைக்காட்சிக்கான தொழில்நுட்ப பணிகள் நிறைவடைந்து வரும் மே முதல் வாரத்தில் தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு தொடங்கப்படவுள்ளது.தமிழகத்தில் கடந்த மாதத்தில் மருதம் செய்திப்பிரிவு நிறுவனம் மற்றும் நீயூஸ் 18 நிறுவனங்களின் சார்பாக இரண்டு புதிய செய்திகள் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது குறிப்பிடதக்கது.இவற்றில் நீயூஸ்18 தமிழ் செய்திகள் தொலைக்காட்சி கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பை தமிழகத்தில் தொடங்கியுள்ளது.மருதம் செய்தி நிறுவனத்தின் வெளிச்சம் டிவி இலவச ஒளிபரப்பாக தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சிகளின் செயற்கைகோள் அலைவரிசை தொடர்பான விபரங்கள் நமது தளத்தில் விரைவில் வெளியிடப்படும்.
தொகுப்பு: சதீஸ் சாட் தமிழ் இணையதளம்