நண்பர்களே இந்தியாவின் முன்னனி பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிறுவனமான எம்எஸ்எம் தங்களது நிறுவனத்தின் முலம் ஹிந்தி திரைப்படங்களை ஒளிபரப்பும் புதிய தொலைக்காட்சி சோனி மேக்ஸ் ஹெச்டி

ஒளிபரப்பை இந்தியாவில் தொடங்கியுள்ளது.இந்தியாவின் முன்னனி நிறுவன தொலைக்காட்சிகள் அனைத்தும் உயர்தர தொழில்நுட்ப ஹெச்டி தரத்தில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.அவ்வரிசையில் எம்எஸ்எம் நிறுவனம் சோனி டிவி ஹெச்டி.சோனி சிக்ஸ் ஹெச்டி.சோனி பிக்ஸ் ஹெச்டி மற்றும் ஆக்ஸன் ஹெச்டி போன்ற தொலைக்காட்சிகளை ஹெச்டி வடிவில் ஒளிபரப்பி வருகிறது.சோனி மேக்ஸ் ஹெச்டி தொலைக்காட்சியின்
செயற்கைகோள் ஒளிபரப்பு அந்நிறுனத்தின் ஹெச்டி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் செயற்கைகோளான இன்டல்சாட்17யில் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இந்தியாவின் கேபிள் மற்றும் டிடிஎச் நிறுவனங்களிலும் தொடங்கப்படலாம்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite Intelsat17@66.0E(C-Band)
Freq Rate 3845
Symbol Rate 30000
Polar Horizontal
Modulation HD.MPEG4.DVB S2
Mode Pay