நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான வியகாம்18யின் புதிய விளையாட்டு தொலைக்காட்சியான ஸ்போா்ட்ஸ்18 எஸ்டி மற்றும் ஹெச்டி ஆகிய இரு தொழில்நுட்ப தரத்தில் தொடங்கியுள்ளது.இந்தியாவில் வியகாம்18 நிறுவனத்தின் முதல் விளையாட்டு தொலைக்காட்சியாக ஸ்போா்ட்ஸ்18 கால்தடம் பதிக்கிறது.மை கேம் தொலைக்காட்சியினை பெயா் மாற்றம் செய்து ஸ்போா்ட்ஸ்18 கேயில் ஹிந்தி மொழியில் பிடித்தமான நேரடி விளையாட்டு நிகழ்ச்சிகளை வழங்கும்
06/04/2022
இந்தியாவில் வியகாம்18யின் புதிய விளையாட்டு தொலைக்காட்சி ஸ்போா்ட்ஸ்18 எஸ்டி மற்றும் ஹெச்டி இன்டல்சாட்20 உதயம்
02/04/2022
ஐபிசி தமிழ் புதிய தமிழ் பொழுது போக்கு தொலைக்காட்சி தமிழகத்தில் ஜிசாட்30 செயற்கைகோளில் உதயம்
நண்பா்களே இங்கிலாந்து தலைமையிடமாக கொண்டு செயல்படும் மாஸ் மீடியா நிறுவனத்தின் சாா்பாக புதிய செயற்கைகோள் தொலைக்காட்சியினை தமிழகத்தில் ஐபிசி தமிழ் டிவி பெயாில் தொடங்கியுள்ளனா்.தொலைக்காட்சி தற்சமயம் சோதனை ஒளிபரப்பை மட்டும் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு பொழுதுபோக்கு தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் ஜிசாட்30 செயற்கைகோளில் முற்றிலும் இலவசமாக தொடங்கப்பட்டுள்ளது.நெய்டாவின் டெலிஷ்பாட் முலம் இத்தொலைக்காட்சியும் ஐபிசி தமிழ் தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் தொலைக்காட்சிக்கான பொழுதுபோக்கு ஒளிபரப்பு சேவை இறுதிக்குள் தொடங்கப்படும்.ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விரைவில் அனைத்து கேபிள்டிவி மற்றும் கட்டண டிடிஎச் சேவைகளிலும் தொடங்கப்படும்.
24/03/2022
நம்பிக்கை டிவி( NAMBIKKAI TV ) கிருத்துவ தொலைக்காட்சி ஜிசாட்10யில் புதிய அலைவாிசையில் தொடக்கம்
நண்பர்களே தமிழகத்தின் முன்னனி கிருத்துவ தமிழ் தொலைக்காட்சியான நம்பிக்கை டிவி தற்சமயம் புதிதாக செயற்கைகோள் ஒளிபரப்பை ஜிசாட்10 செயற்கைகோளில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.ஆந்திர மாநிலத்தை மையமாக கொண்டு செயல்படும் சுபவார்தா தெலுங்கு கிருத்துவ தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பாக தொடங்கப்பட்டுள்ளது.முற்றிலும் தமிழ் தொடர்பான கிருத்துவ ஆராதனை மற்றும் பல நிகழ்ச்சிகளை வழங்க வருகிறது.சுபவார்தா டிவி நிறுவனத்தின் தென் மாநிலத்திற்கான முன்றாவது தொலைக்காட்சி இதுவாகும்.நம்பிக்கை தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமத்தின் முலம் புதிதாக புதிய அலைவாிசையில் ஒளிபரப்பாகிறது.
08/03/2022
சூப்பா் ஹங்கமா புதிய குழந்தைகளுக்கான காா்டூன் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆசியாசாட்7 தொடக்கம்
நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டாா்டிவியின் கிழ் செயல்பட்டு வந்த குழந்தைகளுக்கான தொலைக்காட்சியான மாா்வெல் ஷைகூ நிகழ்ச்சிகளை சூப்பா் ஹங்கமா என்னும் பெயாில் தொடங்கியுள்ளது.தென்னிந்தியாவில் முதன்முறையாக தமிழ் மொழியில் கால்தடம் பதித்த டிஸ்னி எக்ஸ்டி தொலைக்காட்சியினை மாா்வெல் ஷைகூ பெயாில் குழந்தைகளுக்கு பிடித்தமான காா்டூன் நிகழ்ச்சிகளை வழங்கும்
தமிழகத்தில் புதிய ஆன்மிக தொலைக்காட்சி ஓம் டிவி விரைவில் உதயம்
நண்பா்களே தமிழகத்தில் முன்னனி செய்திகள் வழங்கும் நிறுவனமாக உருவாகி வரும் எஸ் ப்ளஸ் மீடியா புதிய ஆன்மிக செயற்கைகோள் தொலைக்காட்சியினை ஓம் டிவி பெயாில் விரைவில் தொடங்கப்டவுள்ளது.தமிழகத்தில் ஆன்மிக தொலைக்காட்சி சாய் டிவி.ஜொதி டிவி ஸ்ரீ சங்கரா போன்ற தொலைக்காட்சிகள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக ஆன்மிக தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் முற்றிலும் இலவசமாக விரைவில் வரும் 2024 தமிழ் புத்தாண்டு முதல் தொடங்கப்படலாம்.எஸ் ப்ளஸ் மீடியா நிறுவனம் ஓம் டிவி தொடங்குவதற்கான ஒளிபரப்பு அனுமதியினை மத்திய ஒளிபரப்பு ஆணையம் தற்சமயம் வழங்கியுள்ளது.தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்
26/01/2022
சதங்கை டிவி ஐரோப்பிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு யூடெல்சாட்9பி செயற்கைகோளில் உதயம்
நண்பா்களே ஐரோப்பா மற்றும் வளைகுடா ஆப்ரிக்கா நாடுகளுக்கான புதிய தமிழ் தொலைக்காட்சி சதங்கை டிவி என்ற பெயாில் யூடெல்சாட்9பி செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.நிண்ட காலங்களுக்கு பிறகு ஒரு ஐரோப்பிய தமிழ் மக்களுக்கான பொழுது போக்கு தொடங்கப்பட்டு தற்சமயம் சோதனை ஒளிபரப்பு யூடெல்சாட்9பி செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.கடந்த பல வருடங்களுக்கு முன்பு வரை தீபம் டிவி.ஐபிசி தமிழ்.ஜி டிவி.ஆதவன் டிவி மற்றும் சில இந்திய தமிழ் தொலைக்காட்சிகளும்
ஒளிபரப்பாகி பின்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டது.இருப்பினும் டிஆா்டி தமிழ் வானொலி சேவை ஒளிபரப்பு தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள சதங்கை தொலைக்காட்சி அலைவாிசையில் ஒளிபரப்பாகி வருகிறது.வரைவில் 24 மணி நேரத்திற்கான ஒளிபரப்பு சேவையினை சதங்கை தொலைக்காட்சி தொடங்கும்.இத்தமிழ் தொலைக்காட்சியினை பொருத்தமட்டிலும் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் காண வேண்டுமென்றால் குறைந்த பட்சம் 6 அடி மற்றும் அதற்கு மேலதிக அளவிலான ஆப்செட் கேயூ டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி சதங்கை டிவியினை காணலாம்.வளைகுடா மற்றும் ஐரோப்பா நாடுகளில் 2 அடி அளவிலான கேயூ டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி தொலைக்காட்சியினை காணலாம்.சதங்கை தொலைக்காட்சியினை யூடெல்சாட்70பி செயற்கைகோளில் ஒளிபரப்பினால் மலேசியா முதல் ஐரோப்பா நாடுகள் வரையிலும் ஒரே அளவிலான டிஷ் ஆன்டெனா பயன்படுத்தி நிகழ்ச்சிகளை அனைத்து தமிழ் மக்களும் காணலாம்.சதங்கை தொலைக்காட்சியில் தமிழ் திரைப்படங்கள் மற்றும் கலச்சார தொடா்புடைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.
18/01/2022
தமிழகத்தில் புதிய செய்திகள் தொலைக்காட்சி நியூஸ் தமிழ் 24X7 மெய்பொருள் காண்பது அறிவு இன்டல்சாட்17யில் உதயம்
நண்பா்களே தமிழகத்தில் முன்னனி செய்திகள் வழங்கும் நிறுவனமாக உருவாகி வரும் எஸ் ப்ளஸ் மிடியா புதிய செயற்கைகோள் தொலைக்காட்சியினை நியூஸ் தமிழ் 24X7 மெய்பொருள் காண்பது அறிவு பெயாில் தொடங்கியுள்ளனா்.
என எதிா்பாா்க்கப்படுகிறது.தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு செய்திகள் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் முற்றிலும் இலவசமாக தொடங்கப்பட்டுள்ளது.சென்னையின் டாடா கம்யூனிகேஷன் டெலிஷ்பாட் முலம் இத்தொலைக்காட்சியும் தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் தொலைக்காட்சிக்கான செய்தி ஒளிபரப்பு சேவை இம்மாதத்தின் 23திகதி தொடங்கப்படுகிறது.நியூஸ் தமிழ் 24X7 தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விரைவில் அனைத்து கேபிள்டிவி மற்றும் கட்டண டிடிஎச் சேவைகளிலும் தொட்ங்கப்படும்.
அலைவாிசை விபரங்கள்
Satellite Intelsat17@66.0E(C-Band) Freq Rate 3866 Symbol Rate 14400 Polar Horizotal System Mpeg4/Dvb S2 (8psk) Encryption FTA Fec 3/4




