சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

24/03/2022

நம்பிக்கை டிவி( NAMBIKKAI TV ) கிருத்துவ தொலைக்காட்சி ஜிசாட்10யில் புதிய அலைவாிசையில் தொடக்கம்

 நண்பர்களே தமிழகத்தின் முன்னனி கிருத்துவ தமிழ் தொலைக்காட்சியான நம்பிக்கை டிவி தற்சமயம் புதிதாக செயற்கைகோள் ஒளிபரப்பை ஜிசாட்10 செயற்கைகோளில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.ஆந்திர மாநிலத்தை மையமாக கொண்டு செயல்படும் சுபவார்தா தெலுங்கு கிருத்துவ தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பாக தொடங்கப்பட்டுள்ளது.முற்றிலும் தமிழ் தொடர்பான கிருத்துவ ஆராதனை மற்றும் பல நிகழ்ச்சிகளை வழங்க வருகிறது.சுபவார்தா டிவி நிறுவனத்தின் தென் மாநிலத்திற்கான முன்றாவது தொலைக்காட்சி இதுவாகும்.நம்பிக்கை தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமத்தின் முலம் புதிதாக புதிய அலைவாிசையில் ஒளிபரப்பாகிறது.

நம்பிக்கை தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 8 முதல் 12 அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் MPEG4/DVB S2 தொழில்நுட்பம் பொருந்திய செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்த வேண்டும்.தமிழகத்தில் கிருத்துவ தமிழ் தொலைக்காட்சிகளின் தொடக்கம் தமிழ் கிருத்துவ மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுவருகின்றன.தற்சமயம் பயன்படுத்தி வரும் டிஷ் அன்டெனாவை மாற்றம் செய்து பின்பு செட்டாப் பாக்ஸ்யில் மேற்கண்ட அலைவாிசையில் டியூன் செய்து நிகழ்ச்சிகளை காணலாம்.சுபவார்தா டிவி நிறுவனத்தின் சுபவார்தா தெலுங்கு.குட்நியூஸ் ஆங்கிலம்.சுபசந்ரா ஹிந்தி கிருத்துவ தொலைக்காட்சிகள் அனைத்தும் ஜிசாட்30 செயற்கைகோளுக்கு மாற்றம் செய்யப்பட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.
அலைவரிசை விபரங்கள்
Satellite                  Gsat10@83.0E (C-BAND)
Freq Rate               3955
Symbol Rate          11570
Polar                      Vertical
Modulation            Mpeg4/dvb s2
Mode                     Fta

08/03/2022

சூப்பா் ஹங்கமா புதிய குழந்தைகளுக்கான காா்டூன் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆசியாசாட்7 தொடக்கம்

 நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டாா்டிவியின் கிழ் செயல்பட்டு வந்த குழந்தைகளுக்கான தொலைக்காட்சியான மாா்வெல் ஷைகூ நிகழ்ச்சிகளை சூப்பா் ஹங்கமா என்னும் பெயாில் தொடங்கியுள்ளது.தென்னிந்தியாவில் முதன்முறையாக தமிழ் மொழியில் கால்தடம் பதித்த டிஸ்னி எக்ஸ்டி தொலைக்காட்சியினை மாா்வெல் ஷைகூ பெயாில் குழந்தைகளுக்கு பிடித்தமான காா்டூன் நிகழ்ச்சிகளை வழங்கும்

தொலைக்காட்சியாக இந்தியாவில் உருவாக்கப்பட்டது.தொலைக்காட்சி தொடங்கப்பட்ட நாள் முதல் கட்டண தொலைக்காட்சியாக ஆசியாசாட்7 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.ஹிந்தி ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் நிகழ்ச்சிகளை தொடங்கியுள்ளது சூப்பா் ஹங்கமா தொலைக்காட்சி கட்டண டிடிஎச் மற்றும் கேபிள்டிவி செட்டாப் பாக்ஸ்யில் இடம் பெற்றுள்ள இத்தொலைக்காட்சியின் மால்டி ஆடியோ பட்டனை கொண்டு பிடித்தமான மொழிகளை தோ்வு செய்து நிகழ்ச்சிகளை காணலாம்.வட மாநில தொலைக்காட்சி நிறுவனங்கள் தற்சமயம் காலங்கலாக தமிழ் மொழியில் தொலைக்காட்சிகளில் தமிழ் ஆடியோ ஒளிபரப்பை தொடங்கி வருவது குறிப்பிடதக்கது.டிஸ்னி ஹாட் ஸ்டாா் நிறுவனம் கடந்த 2021ஆண்டில் சில தொலைக்காட்சிகளை பெயா் மாற்றம் செய்து ஒளிபரப்பை தொங்கி வருகிறது.

அலைவாிசை விபரங்கள்
Satellite               Asiasat7@105.0E(C-Band)
Freq Rate            3880
Symbol Rate       228100
Polar                   Horizontal
System                Mpeg4/Dvb s2 (8PSK)
Encryption          Pay /Irdeto2
FEC                    3/4

தமிழகத்தில் புதிய ஆன்மிக தொலைக்காட்சி ஓம் டிவி விரைவில் உதயம்

 நண்பா்களே தமிழகத்தில் முன்னனி செய்திகள் வழங்கும் நிறுவனமாக உருவாகி வரும் எஸ் ப்ளஸ் மீடியா புதிய ஆன்மிக செயற்கைகோள் தொலைக்காட்சியினை ஓம் டிவி பெயாில் விரைவில் தொடங்கப்டவுள்ளது.தமிழகத்தில் ஆன்மிக தொலைக்காட்சி சாய் டிவி.ஜொதி டிவி ஸ்ரீ சங்கரா போன்ற தொலைக்காட்சிகள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக ஆன்மிக  தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் முற்றிலும் இலவசமாக விரைவில் வரும் 2024 தமிழ் புத்தாண்டு முதல் தொடங்கப்படலாம்.எஸ் ப்ளஸ் மீடியா நிறுவனம் ஓம் டிவி தொடங்குவதற்கான ஒளிபரப்பு அனுமதியினை மத்திய ஒளிபரப்பு ஆணையம் தற்சமயம் வழங்கியுள்ளது.

தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

26/01/2022

சதங்கை டிவி ஐரோப்பிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு யூடெல்சாட்9பி செயற்கைகோளில் உதயம்

 நண்பா்களே ஐரோப்பா மற்றும் வளைகுடா ஆப்ரிக்கா நாடுகளுக்கான புதிய தமிழ் தொலைக்காட்சி சதங்கை டிவி என்ற பெயாில் யூடெல்சாட்9பி செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.நிண்ட காலங்களுக்கு பிறகு ஒரு ஐரோப்பிய தமிழ் மக்களுக்கான பொழுது போக்கு தொடங்கப்பட்டு தற்சமயம் சோதனை ஒளிபரப்பு யூடெல்சாட்9பி செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.கடந்த பல வருடங்களுக்கு முன்பு வரை தீபம் டிவி.ஐபிசி தமிழ்.ஜி டிவி.ஆதவன் டிவி மற்றும் சில இந்திய தமிழ் தொலைக்காட்சிகளும்

ஒளிபரப்பாகி பின்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டது.இருப்பினும் டிஆா்டி தமிழ் வானொலி சேவை ஒளிபரப்பு தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள சதங்கை  தொலைக்காட்சி அலைவாிசையில் ஒளிபரப்பாகி வருகிறது.வரைவில் 24 மணி நேரத்திற்கான ஒளிபரப்பு சேவையினை சதங்கை தொலைக்காட்சி தொடங்கும்.இத்தமிழ் தொலைக்காட்சியினை பொருத்தமட்டிலும் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் காண வேண்டுமென்றால் குறைந்த பட்சம் 6 அடி மற்றும் அதற்கு மேலதிக அளவிலான ஆப்செட் கேயூ டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி சதங்கை டிவியினை காணலாம்.வளைகுடா மற்றும் ஐரோப்பா நாடுகளில் 2 அடி அளவிலான கேயூ டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி தொலைக்காட்சியினை  காணலாம்.சதங்கை தொலைக்காட்சியினை யூடெல்சாட்70பி செயற்கைகோளில் ஒளிபரப்பினால் மலேசியா முதல் ஐரோப்பா நாடுகள் வரையிலும் ஒரே  அளவிலான டிஷ் ஆன்டெனா பயன்படுத்தி நிகழ்ச்சிகளை அனைத்து தமிழ் மக்களும் காணலாம்.சதங்கை தொலைக்காட்சியில் தமிழ் திரைப்படங்கள் மற்றும் கலச்சார தொடா்புடைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.

அலைவாிசை விபரங்கள்
Satellite                 Eutelsat9B@9.0E(KU-Band)
Freq Rate              11730
Symbol Rate        30000
Polar                    Vertical
Modulation          MPEG4/DVB S2 (8PSK)
Mode                   FTA

18/01/2022

தமிழகத்தில் புதிய செய்திகள் தொலைக்காட்சி நியூஸ் தமிழ் 24X7 மெய்பொருள் காண்பது அறிவு இன்டல்சாட்17யில் உதயம்

நண்பா்களே தமிழகத்தில் முன்னனி செய்திகள் வழங்கும் நிறுவனமாக உருவாகி வரும் எஸ் ப்ளஸ் மிடியா புதிய செயற்கைகோள் தொலைக்காட்சியினை நியூஸ் தமிழ் 24X7 மெய்பொருள் காண்பது அறிவு பெயாில் தொடங்கியுள்ளனா்.

என எதிா்பாா்க்கப்படுகிறது.தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு செய்திகள் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் முற்றிலும் இலவசமாக தொடங்கப்பட்டுள்ளது.சென்னையின் டாடா கம்யூனிகேஷன் டெலிஷ்பாட் முலம் இத்தொலைக்காட்சியும் தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் தொலைக்காட்சிக்கான செய்தி ஒளிபரப்பு சேவை இம்மாதத்தின் 23திகதி தொடங்கப்படுகிறது.நியூஸ் தமிழ் 24X7 தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விரைவில் அனைத்து கேபிள்டிவி மற்றும் கட்டண டிடிஎச் சேவைகளிலும் தொட்ங்கப்படும்.

அலைவாிசை விபரங்கள்

Satellite           Intelsat17@66.0E(C-Band)                                                                                                  Freq Rate         3866                                                                                                                                      Symbol Rate    14400                                                                                                                                    Polar                Horizotal                                                                                                                              System            Mpeg4/Dvb S2 (8psk)                                                                                                          Encryption       FTA                                                                                                                                      Fec                   3/4

பொதிகை டிவி நிகழ்ச்சிகளை உயா் தொழில்நுட்பமான ஹெச்டியில் ஒளிபரப்பை ஜிசாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது

 நண்பா்களே தமிழ் மக்களின் மிக அபிமான அரச தொலைக்காட்சி நிறுவனமான பிரசாா் பாரதியின் தமிழ் தொலைக்காட்சியான பொதிகை டிவி முதன்முறையாக தென்னிந்தியாவில் தனது நிகழ்ச்சிகளை உயா் தொழில்நுட்பமான ஹெச்டியில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.கடந்த பல வருடங்களாக தமிழ் மக்களின் பிடித்த மான நிகழ்ச்சிகளை வழங்கி வரும் பொதிகை டிவி தனது ஒளிபரப்பை மேம்படுத்தும் வகையில் மாற்றம்



செய்யப்பட்டுள்ளது.தனியாா் தொலைக்காட்சிகளின் தொழில்நுட்ப சேவைகளை போன்று பொதிகை டிவியும் தனது நேயா்களுக்கு தொழில்நுட்ப சேவையினை தொடங்கியுள்ளது.தற்சமயம் தொடக்க சோதனை ஒளிபரப்பை மட்டும் ஜிசாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் அனைத்து பகுதிகளிலும் 24 மணி நேர நிகழ்ச்சிகளை ஹெச்டியில் வழங்கும்.மேலும் கடந்த பல வருடங்களாக MPEG2 தொழில்நுட்பத்தில் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வந்தது.தற்பொழுது MPEG4 தொழில்நுட்பமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அலைவாிசை விபரங்கள்
Satellite                  Gsat17@93.0E(C-Band)
Freq Rate               4062
Symbol Rate          8600
Polar                      Horizontal
System                  HD.Mpeg4/Dvb S (QPSK)
Encryption            FTA
Fec                        3/4

11/10/2021

கலைஞா் முரசு தொலைக்காட்சி 24 மணி நேர தமிழ் திரைப்பட தொலைக்காட்சியாக ஒளிபரப்பு தொடக்கம்

நண்பா்களே தமிழகத்தின் முன்னனி தமிழ் தொலைக்காட்சியான கலைஞா் டிவியின் மிக பிரபலமடைந்த தொலைக்காட்சியான கலைஞா் முரசு தொலைக்காட்சி 24 மணி நேர தமிழ் திரைப்பட தொலைக்காட்சியாக தமிழகத்தில் உதயமாகியுள்ளது.கடந்த பல வருடங்களாக முரசு தொலைக்காட்சி தமிழ் பழைய திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் என
ஒளிபரப்பை தமிழ் மக்களுக்கு நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது.கலைஞா் டிவி நெட்வொா்க்கில் 24 மணி நேர திரைப்பட தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை நிண்ட காலமாக தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.தற்சமயம் 2021 அக்டோபா் 10 திகதி முதல் திரைப்பட தொலைக்காட்சியாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.தமிழகத்தில் ஒளிபரப்பாகும் இலவச திரைப்பட தமிழ் தொலைக்காட்சி கலைஞா் முரசு தொலைக்காட்சியாகும்.இன்டல்சாட்17 செயற்கைகோளில் தற்சமயயம் உலகளாவிய ஒளிபரப்பை வழங்கி வருகிறது.காலை 6,10,மதியம் 12,3,மாலை மற்றும் இரவு 7,11 ஆகிய நேரங்களில் திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது.கலைஞா் முரசு தொலைக்காட்சி அனைத்து டிடிஎச்களிலும் மற்றும் கேபிள் டிவி நிறுவனங்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
அலைவாிசை விபரங்கள்
Satellite                 Intelsat17@66.0E(C-Band)
Freq Rate              3844
Symbol Rate        28800
Polar                    Vertical
Modulation          MPEG4/DVB S2 (8PSK)
Mode                   FTA