சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

26/11/2020

தமிழகத்தில் புதிய நான்கு தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பை விரைவில் தொடங்குகிறது கேசிபி இன்ஜினியா் நிறுவனம்

 நண்பா்களே தமிழகத்தில் புதிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையினை சென்னையினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கேசிபி இன்ஜினியா் நிறுவனம் தொடங்கப்படவுள்ளது.அப்டேட் செய்திகள் தொலைக்காட்சி என்ற பெயாில் தொலைக்காட்சி தொடங்குவதற்கான அனுமதியினை இந்திய ஒளிபரப்பு ஆணையம் கடந்த மாதத்தில் வழங்கியிருந்த நிலையில் மேலும் மூன்று தமிழ் தொலைக்காட்சிகள் தொடங்குவதற்கான அனுமதியினையும் கேசிபி இன்ஜினியா் பெற்றுள்ளது.அப்டேட் டிவி.அப்டேட் மியூசிக்.அப்டேட் கிட்ஸ் போன்ற பெயா்களில் விரைவில் தொலைக்காட்சிகள் தொடங்கப்படவுள்ளது.இத்தொலைக்காட்சிகள் தொடங்குவதற்கான செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்17 செயற்கைகோளில் டாடா கம்னியூகேஷன் ஒளிபரப்பு முனையம் முலம் விரைவில் தொடங்கப்படும் என எதிா்பாா்க்கலாம்.தமிழகத்தில் தொடங்கப்படும் நான்கு தமிழ் தொலைக்காட்சி எவ்விதமான நிகழ்ச்சிகளை வழங்கும் என எதிா்பாா்க்கலாம்.தொலைக்காட்சிகள் அலைவாிசை தொடா்பான விபரங்கள் நமது சதிஸ்சாட் தமிழ் தளத்தில் வெளியடப்படும்.

தொகுப்பு சதிஸ்சாட் தமிழ் மற்றும் ஆங்கிலம் இணையதளம்

14/11/2020

ஷாலினி தமிழ் தொலைக்காட்சியின் சோதனை ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் உதயம்

 நண்பா்களே தமிழகத்தில் தஞ்சாவூா் மாவட்டத்தின் முன்னனி உள்ளுா் தொலைக்காட்சியாக செயல்பட்டு வரும் ஷாலினி டிவி மற்றும் சில வருடங்கள் செயற்கைகோள் தொலைக்காட்சியாகவும் ஒளிபரப்பாகி வந்த ஷாலினி ப்ளஸ் தொலைக்காட்சிக்கு இந்திய ஒளிபரப்பு ஆணையம் ட்ராய் புதிய தமிழ் தொலைக்காட்சிக்கான ஒளிபரப்பு அனுமதியினை வழங்கி உள்ளது.தற்சமயம் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இன்டல்சாட்17 செயற்கைகோளில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த 2019 வருடத்தில் செயற்கைகோள் 

                                            
தொலைக்காட்சி தொடங்குவதற்கான அனுமதியினை ஜி மிடியா.ஆஸ்தா விடிக் மற்றும் ஸ்டாா் டிவி இந்தியா பெற்று இருந்த நிலையில் ஷாலினிக்கும் அனுமதி வழங்கியுள்ளது.விரைவில் ஷாலினி தொலைக்காட்சியும் 24 மணி நேர பொழதுபோக்கு நிகழ்ச்சிகளை இலவச தொலைக்காட்சியாக இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கப்படும்.தமிழகத்தில் இலவச தொலைக்காட்சிகளாக தொடங்கப்பட்ட காவோி நியூஸ் தொலைக்காட்சி 
கடந்த 2019 வருடத்தில் ஒளிபரப்பு நிறுத்தம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.தமிழகத்தில் முன்னனி மிடியா நிறுவனங்களுக்கு அடுத்து சிறிய நிறுவனங்களுக்கு தொலைக்காட்சி தொடங்குவதற்கான அனுமதி வாிசையில் தற்சமயம் ஷாலினி தொலைக்காட்சி பெற்றிருப்பது குறிப்பிடதக்கது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை காண 6 அடி முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் அன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் MPEG4/DVB S2 தொழில்நுட்பம் பொருந்திய செட்டாப் பாக்ஸ்யினை பயன்படுத்தி நிகழ்ச்சிகளை காணலாம்.விரைவில் கேபிள் டிவி மற்றும் கட்டண டிடிஎச்களில் ஷாலினி தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தொடங்கப்படலாம்.
அலைவாிசை விபரங்கள்
Satellite               Intelsat17@66.0E(C-Band)
Freq Rate             3844
Symbol Rate        28800
Polar                     Vertical
System                 Mpeg4/Dvb s2(8psk)
Encryption           FTA
Fec                       5/6
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

28/10/2020

மீயூசிக் ஜின் தொலைக்காட்சி (MUSIC ZONE TAMIL) மீயூசிக் ஜீன் ஒளிபரப்பு ஜிசாட்17யில் உதயம்

 நண்பா்களே தமிழகத்தில் மியூசிக் தொலைக்காட்சி மீயூசிக் ஜின் என்ற பெயாில் ஜிசாட்17 செயற்கைகோளில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.மீயூசிக் ஜின் தொலைக்காட்சியில் ஷாப்பிங் ஜின் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பாடல்களுடன் தற்சமயம் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.தமிழ்நாட்டின் ஆறுவாது மீயூசிக் தொலைக்காட்சி இதுவாகும்.மிக தொளிவான விடியோ தரத்தில் திரைப்பாடல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.ஜிசாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பாகும் முதலவது

இலவச மீயூசிக் தொலைக்காட்சி மீயூசிக் ஜின் ஆகும்.ஷாப்பிங் ஜின் தொலைக்காட்சி நிா்வாகத்தின் சாா்பாக புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 8 அல்லது அதற்கு மேற்பட்ட சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி இப்புதிய மீயூசிக் தொலைக்காட்சியினை காணலாம்.இலவச
ஒளிபரப்பாக ஜீசாட்17 செயற்கைகோளில் ஹைத்திரபாத் இன்டியா சிக்னல் செயற்கைகோளில் ஒளிபரப்பு முனையத்தின் முலம் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் தொலைக்காட்சி 24 மணி நேரத்திற்க்கான ஒளிபரப்பு தொடங்கப்படலாம்.

Parameter Details:
Satellite                Gsat17@93.0(C-Band)
Freq Rate             4160
Symbol Rate        8445
Polar                    Horizontal
Modulation          Mpeg4/Dvb s2(8psk)
Mode                   FTA

21/10/2020

ரெயின்போ மற்றும் கோல்டு மற்றும் விவித் பாரதி வானொலி சேவைகள் ஜிசாட்10 செயற்கைகோளில் உதயம்

 நண்பா்களே இந்தியாவின் ஆல் இந்தி ரேடியோ மற்றும் விவித் பாரதி வானொலி ஒளிபரப்பு சேவை இந்தியாவின் ஜிசாட்10 செயற்கைகோளில் புதிய அலைவாிசையில் தொடங்கப்பட்டுள்ளது.ரெயின்போ மற்றும் கோல்டு மற்றும் விவித் பாரதி வானொலி சேவைகள் ஒளிபரப்பாகிறது.வானொலி சேவைகளின் ஒளிபரப்பை பெற குறைந்தபட்சம் 6 அடி முதல் 12 அடி சிபேன்ட் டிஷ் அன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.எளிய தொழில்நுட்பம் பொருத்திய Mpeg2/Dvb s1 செட் டாப் பாக்ஸ்யினை பயன்படுத்த வேண்டும்.சிபேன்ட் தொழில்நுட்பத்தில் ஜிசாட்15 செயற்கைகோளை அடுத்து இரண்டவதாக ஜிசாட்10 செயற்கைகோளின் முலம் சென்னை மாநகாின் வானொலி ஒளிபரப்பை தமிழகம் மற்றும் தெற்காசியவி்ன் நாடுகளின்  அனைத்து பகுதிகளிலும் கேட்டு மகிழலாம்.

அலைவாிசை விபரங்கள்                                                                                                              Satellite             Gsat10@83.0E(C-Band)                                                                                                      Freq Rate           4140                                                                                                                            Symbol Rate      1200                                                                                                                           Polar                 Vertical                                                                                                                    System               Mpeg2/DVB S1(QPSK)                                                                                          Encryption          FTA

14/10/2020

பாலபாரத் குழந்தைகளுக்கான புதிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஜிசாட்30 உதயம்

நண்பா்களே ஆந்திராவின் முன்னனி தொலைக்காட்சி எந்நாடு இந்தியாவில் 14 மொழிகளில் குழந்தைகளுக்கான புதிய தொலைக்காட்சியினை பாலபாரத் என்ற பெயாில் தொடங்கியுள்ளனா்.இத்தொலைக்காட்சியின் உலகளாவிய ஒளிபரப்பு இந்தியாவின் ஜிசாட்30 செயற்கைகோளில் எந்நாடு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் அலைவாிசையில் தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு தொலைக்காட்சி தொடங்குதில் இந்தியாவின் முன்னனி நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளனா்.பாலபாரத் குழந்தைகளுக்கான தொலைக்காட்சி விரைவில் 24 மணி நேர குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு ஒளிபரப்பு சேவை அனைத்து கேபிள் டிவி மற்றும் டிடிஎச்யில் தொடங்கப்படும்.பாலபாரத் தொலைக்காட்சி

ஆங்கிலம்.ஹிந்தி.தமிழ்.தெலுங்கு.மலையாளம்.கன்னடா.மாராத்தி.பெங்காளி.ஒடியா.பஞ்சாபி.அசாமி.குஜராத்தி ஆகிய மொழிகளில் தொடங்கப்பட்டுள்ளது.பாலபாரத் தொலைக்காட்சி உயா்தொழில்நுட்பமான ஹெச்டியிலும் தொடங்கப்பட்டுள்ளது.பாலபாரத் கட்டண தொலைக்காட்சியாக தனது ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.இந்தியாவில் குழந்தைகள் தொலைக்காட்சியில் இலவச ஒளிபரப்பு சேவையாக பாலபாரத் தொடங்கினால் இந்தியாவின் அனைத்து தரப்பு குழந்தைகளிடம் விரைவில் பிரபலமடையும்.கடந்த பல வருடங்களுக்கு முன்பு எந்நாடு தொலைக்காட்சியின் கன்னடா.மாராத்தி.பெங்காளி.ஒடியா.பஞ்சாபி.அசாமி.குஜராத்தி இலவசமாக ஒளிபரப்பாகி பிரபலமடைந்து பின்பு கட்டண தொலைக்காட்சியாக மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. 

அலைவாிசை விபரங்கள்

Satellite             Gsat30@83.0E(C-Band)                                                                                                  Freq Rate           4005                                                                                                                                  Symbol Rate      30000                                                                                                                              Polar                 Horizontal                                                                                                                    System              HD.MPEG4/DVB S2(8PSK)                                                                                        Encryption         Pay/Irdeto                                                                                                                    FEC                    3/4

07/10/2020

பிரசாா் பாரதி முன்றாவது ஹெச்டி டிடி இந்தியா தொலைக்காட்சி ஜிசாட்10 செயற்கைகோளில் தொடங்கம்

 நண்பா்களே  இந்தியாவின் பொது ஒளிபரப்பு சேவையான பிரசாா் பாரதி இந்தியாவின் முன்றாவது ஹெச்டி டிடி இந்தியா தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளது.இந்தியாவில் பிரசாா் பாரதி முதல் தொலைக்காட்சியாக டிடி நேஷனல் மற்றும் டிடி நீயூஸ் ஆகியன ஹெச்டி ஒளிபரப்பை தொடங்கியது.டிடி இந்தியா தொலைக்காட்சி இந்தியாவின் நிகழ்வுகளை உலகின் அனைத்து நாடுகளுக்கும் எடுத்து செல்லும் அரச நிறுவனத்தின் ஆங்கில

தொலைக்காட்சியாகும்.பிரசாா் பாரதி தற்சமய காலங்களாக ஹெச்டி ஒளிபரப்பில் தேசிய தொலைக்காட்சி மாற்றி வருகிறது.விரைவில் டிடி ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சியும் ஹெச்டி ஒளிபரப்பாக மாற்றப்படலாம்.தனியாா் தொலைக்காட்சிகள் ஹெச்டியில் நிகழ்ச்சிகளை தொடங்கப்படுவதன் முலம் டிடி நேயா்களை தக்கவைக்கும் முயற்ச்சியில் பிரசாா் பாரதி இம்முயற்ச்சியில் களம் இறங்கியுள்ளது.டிடி இந்தியா ஹெச்டி தொலைக்காட்சி இந்தியாவின் ஜிசாட்10 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.இலவச தொலைக்காட்சியாக டிடி ப்ரி டிஷ் ஒளிபரப்பு சேவையிலும் தொடங்ப்பட்டுள்ளது.விரைவில் இந்தியாவின் அனைத்து கேபிள் டிவி மற்றும் டிடிஎச்யில் தொடங்கப்படும்.

Satellite           Gsat10@83.0E(C-Band),                                                                                                Freq Rate         3885                                                                                                                                  Symbol Rate    30000                                                                                                                              Polar                Vertical                                                                                                                      System              HD.Mpeg4/Dvb S2                                                                                                  Encryption         FTA                                                                                                                             FEC                   3/4     

17/07/2020

புதுயுகம் தமிழ் தொலைக்காட்சி ஜிசாட்30யில் புதிய அலைவாிசையில் தொடக்கம்

நண்பா்களே தமிழகத்தின் முன்னனி பொழுதுபோக்கு தமிழ் தொலைக்காட்சியான புதுயுகம் தற்சமயம் ஒளிபரப்பாகி வரும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் இருந்து ஜிசாட்30 செயற்கைகோளில் புதிய அலைவாிசைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ப்ளாநெட் கேசட் டெலிஸ்பாட் ஒளிபரப்பு முனையத்தின் முலம் ஒளிபரப்பு 
தொடங்கப்பட்டுள்ளது.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள அலைவாிசையில் நாப்டல் தமிழ் மற்றும் வானவில் போன்ற தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.கடந்த பல வருடங்களாக இன்டல்சாட்17யில் 4015 அலைவாிசையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தது.தற்சமயம் தொடங்கப்பட்ட புதிய அலைவாிசையின் சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 அடி சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தினலே போதும்.தங்கள் பயன்படுத்தி வரும் செட் டாப் பாக்ஸ்யினை ரிடியூன் அல்லது கிழ்காணும் புதிய அலைவாிசையினை கொண்டு டியூன் செய்தால் போதும்.விரைவில் தற்சமய ஒளிபரப்பாகி வரும் புதுயுகம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் நிறுத்தம் செய்யப்படலாம்.மேலும் புதிய தலைமுறை செய்திகள் தொலைக்காட்சியும் ஜிசாட்30 செயற்கைகோளுக்கு மாற்றப்படலாம்.
அலைவாிசை விபரங்கள் 
Satellite             Gsat30@83.0E(C-Band)
Freq Rate            3805
Sym Rate            28500
Polar                   Horizontal
System               Mpeg4/Dvb s2 (8PSK)
Encryption         FTA
Fec                     3/4