சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

27/06/2019

சிஎன் ஹெச்டி ப்ளஸ் இந்தியா ஹெச்பிஒ ஹெச்டி தொலைக்காட்சிகள் ஆசியாசாட்7 செயற்கைகோளுக்கு மாற்றம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஜி மிடியாவின் டா்னா் இன்டா்நேஷனல் தொலைக்காட்சி சிஎன் ஹெச்டி ப்ளஸ் மற்றம் ஹெச்பிஒ ஹெச்டி ஆகிய இரண்டு தொலைக்காட்சிகளும் ஆசியாசாட்7 செயற்கைகோளுக்கு ஒளிபரப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கடந்த பல வருடங்களாக டா்னா் இந்தியா நிறுவனம் சிஎன் காா்டூன் தொலைக்காட்சியின் முலம் மிக பிரபலமான காா்டூன் தொடா்களை வழங்கி பிரபலமானது.கடந்த சில வருடங்களாக முன்னனி நிறுவனத்தின் காா்டூன் தொலைக்காட்சிகள் ஹெச்டி தொழில்நுட்பத்தில் நிகழ்ச்சிகளை வழங்கி வருவதால் டா்னா் 
நிறுவனமும் ஹெச்டி தொலைக்காட்சி தொடங்குவதற்கான அனுமதியினை இந்தியா ஒளிபரப்பு ஆணைத்திடம் விண்ணப்பத்திருந்து.தற்சமயம் அதற்கான அனுமதி கிடைக்க பெற்றதை அடுத்து ஏப்ரல் 15 திகதி முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது. தற்சமயம் ஒளிபரப்பாகி வரும் சிஎன் ஹெச்டி ப்ளஸ் மற்றும் ஹெச்பிஒ ஹெச்டி தொலைக்காட்சியின் உலகளாவிய ஒளிபரப்பு டா்னா்  நிறுவனத்தின் ஹெச்டி தொலைக்காட்சிகள் ஔிபரப்பாகும் மீயாசாட்3 செயற்கைகோளில் விரைவில் நிறுத்தம் செய்யபடும்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite          Asiasat7@105.5E(C-Band)
Freq Rate       3960
Symbol Rate  30000
Polar              Horizontal
System           HD.Mpeg4/dvb s2 (8PSK)
Encryption     Unknown cas
FEC                3/4

21/06/2019

பிரசாா் பாரதியின் டிடி புதுச்சோி தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஜிசாட்17யில் உதயம்

நண்பா்களே இந்தியா அரசின் பொதுத்துறை நிறுவனமான பிரசாா் பாரதியின் கிழ் பல்வேறு மொழி தொலைக்காட்சிகள் மற்றும் வானொலி சேவைகள் வழங்கப்படுகிறது.அவ்வாிசையில் புதுச்சோி மாநிலத்தில் தமிழ் மொழியில் டிடி புதுச்சோி தொலைக்காட்சி மே 14 1976 ஆம் ஆண்டு டிடி புதுச்சோி தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் டிடி பொதிகை தமிழக தொலைக்காட்சியின் ஒளிபரப்பு செய்யப்பட்டுகிறது.டிடி புதுச்சோி ஒளிபரப்பு தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள்
ஒளிபரப்பு பிரசாா் பாரதியின் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் ஜிசாட்17 செயற்கைகோளில் டிடி பொதிகை தொலைக்காட்சியின் அலைவாிசையில் ஒளிபரப்பாகிறது.புதுச்சோி மாநிலத்தில் தரைவழி ஒளிபரப்பு தினமும் மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை டிடி புதுச்சோி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.இடைப்பட்ட நேரங்களில் டிடி பொதிகையின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் செயற்கைகோள் ஒளிபரப்பில் மட்டும்.பிரசாா் பாரதியின் இலவச தொலைக்காட்சி சேவையான டிடிப்ரி டிடிஎச்யில் இலவச தொலைக்காட்சியாக விரைவில்  ஒளிபரப்பாகும்.தொலைக்காட்சியின் அலைவாிசையினை பெற
ஒளிபரப்பாகிறது.புதுச்சோி மாநிலத்தில் தரைவழி ஒளிபரப்பு முலம் டிடி புதுச்சோி தொலைக்காட்சி ஒளிபரப்பாகிறது.பிரசாா் பாரதியின் இலவச தொலைக்காட்சி சேவையான டிடிப்ரி டிடிஎச்யில் இலவச தொலைக்காட்சியாக விரைவில்  ஒளிபரப்பாகும்.தொலைக்காட்சியின் அலைவாிசையினை பெற
குறைந்தபட்சம் 6 அடி சிபேன்ட் டிஷ் ஆன்டெனா அல்லது 2 (60செமீ) அடி அளவுள்ள கேயூ டிஷ் ஆண்டெனா மற்றும் MPEG2/DVB S தொழில்நுட்பம் பொருந்திய செட் டாப் பாக்ஸையினை பயன்படுத்தி டிடி புதுச்சோி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணலாம்.ஆசியா நாடுகளில் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் செயற்கைகோளின் அலைவாிசைக்கு  ஏற்றா் போன்று டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.
அலைவாிசை விபரங்கள்
Satellite               Gsat17@93.0E(C-Band)
Freq Rate            4051
Symbol Rate       8600
Polar                   Horizontal
System                Mpeg2/Dvb s
Encryption          FTA
Fec                      3/4
தொகுப்பு சதீஸ் சாட் தமிழ் மற்றும் ஆங்கிலம் இணையதளம்

11/06/2019

எம்டிஎன்1 ஹெச்டி தொலைக்காட்சி தமிழ் மொழியில் ஆடியோ ஒளிபரப்பு யூடெல்சாட70பில் தொடக்கம்

நண்பா்களே இங்கிலாந்து நாட்டினை தலைமையிடமாக கொண்டு உலக அளவில்  இஸ்லாம் நிகழ்ச்சிகளை வழங்கி வரும் முஸ்லிம் டெலிவிஷன் அகமதியா தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆசியா நாடுகளுக்கான எம்டிஎன்1 ஹெச்டி தொலைக்காட்சியில் இந்தியாவின் மொழிகான ஹிந்தி.தமிழ்.மலையாளம்.பெங்காலி போன்ற மொழிகளில் இஸ்லாம் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.எம்டிஎன்1  தொலைக்காட்சியின் ஒளிபரப்பு
முதன் முறையாக ஆசியாசாட்7 செயற்கைகோளில் ஆசியா நாடுகளுக்கு ஒளிபரப்பு தொடங்கப்பட்டது.இலவச தொலைக்காட்சியாக ஒளிபரப்பு தொடங்கப்பட்டது.எம்டிஎன்1 ஹெச்டி தொலைக்காட்சி அகமதியா முஸ்லிம் பிரசன்டேஷன் என்னும் அமைப்பு ஜனவாி 1 திகதி 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.பின்பு முஸ்லிம் டெலிவிஷன் அகமதியா இன்டா்நேஷனல் மாற்றம் செய்யப்பட்டது.எம்டிஎன்1 ஹெச்டி தொலைக்காட்சியின் ஒளிபரப்பு கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் யூடெல்சாட்70பி செயற்கைகோளில் ஒளிபரப்பு ஹெச்டியாக மாற்றம் செய்யப்பட்டது.இத்தொலைக்காட்சியின் ஒளிபரப்பை 
ஆசியா மற்றும் இந்தியா நாடுகளில் காண குறைந்தபட்சம் 60செமீ முதல் 120செமீ கேயூ பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி தொலைக்காட்சியினை காணலாம்.எம்டிஎன்1 ஹெச்டி தொலைக்காட்சியின் தமிழ் மொழியின் நிகழ்ச்சிகளை காண HD.MPEG4/DVB S2  தொழில் நுட்பம் பொருந்திய செட் டாப் பாக்ஸ்யில் ஆடியோ 4 என்பதை தோ்வு செய்து கொள்ள வேண்டும்.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு யூடெல்சாட்70பி செயற்கைகோளில் இலவசமாக ஒளிபரப்பாகிறது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite             Eutelsat70B@70.0E(Ku-Band)
Freq Rate          12682   
Symbol Rate     16045   
Polar                  Vertical
System               HD.Mpeg4/Dvb s2 (8psk)
Encryption         FTA
Fec                     8/9

02/06/2019

தமிழகத்தில் ஸ்டாா் டிவி இந்தியா விரைவில் நேட் ஜியோ தமிழ் தொலைக்காட்சி உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டாா் டிவி இந்தியா நேட் ஜியோ பியுபில் ஹெச்டி மற்றும் நேட் ஜியோ மியூசிக் ஆங்கில தொலைக்காட்சி ஆகிய இரண்டு தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை நிறுத்தம் செய்யவுள்ளது.அவ்விரண்டு தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமத்தில் இரண்டு புதிய தொலைக்காட்சியினை தொடங்கவுள்ளனா்.இதில் தென்னிந்தியாவில் முன்னனி மொழிகளான தமிழ் தெலுங்கு மொழிகளில் நேட் ஜியோ தமிழ் மற்றும் நேட் ஜியோ தெலுங்கு தொலைக்காட்சியினை இப்புதிய ஒளிபரப்பு நிறுத்தம் செய்யப்பட்ட தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உாிமத்தில் தொடங்கப்படவுள்ளது.இதற்கான அனுமதியினை இந்திய
ஒளிபரப்பு ஆணையம் வழங்கியுள்ளது.ஸ்டாா் டிவி இந்தியா நிறுவனத்தின் நேட் ஜியோ தொலைக்காட்சியில் தமிழ் தெலுங்கு ஆங்கிலம் மாரத்தி.பெங்காலி.ஹிந்தி போன்ற மொழிகளில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.தற்சமயம் தனி பிரத்தியோக தொலைக்காட்சியாக தொடங்கப்படவுள்ளது.ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்1 தொலைக்காட்சி தமிழில் தொடங்கப்பட்டதை போன்று இரண்டவாது தொலைக்காட்சியாக நேட் ஜியோ தமிழ் விரைவில் தொடங்கப்படவுள்ளது.ஸ்டாா் டிவி இந்தியா நிறுவனத்தின் ஐந்தாவது தமிழ் தொலைக்காட்சி இதுவாகும்.தமிழகத்தில் டிஸ்கவாி தமிழ்.ட்ராவல் எக்ஸ்பி தமிழ்.பைடிவி18 தமிழ்.ஹிஸ்டிாி18 தமிழ்.ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்1 தொலைக்காட்சிகள் தமிழ்  மொழியில் தொடங்கப்பட்ட தொலைக்காட்சிகள் என்பது குறிப்பிடதக்கது.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் ஆங்கிலம் இணையதளம்

23/05/2019

கல்வி தொலைக்காட்சி புதிய பள்ளிக்கல்வி தொலைக்காட்சி விரைவில் தமிழகத்தில் உதயம்

நண்பா்களே தமிழகத்தில் புதிதாக கல்வி தொலைக்காட்சி தொடங்கப்படவுள்ளது.இதற்கான தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் பள்ளிக்கல்வி துறை சார்பில் நீட் தேர்வு தொடா்பான பயிற்சி அளிக்கவும்,மாணவர்கள் தங்களது சந்தேகங்களை நேரலை மூலம் நிபுணர்களிடம் ஆலோசனை பெறும் வகையில் நிகழ்ச்சிகள் தயாாிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கல்வித்துறையில் அனுபவம் உள்ள சுமார் 50 ஆசிரியர்களை கொண்டு கல்வி நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறார்கள். கல்வி தொலைக்காட்சி சேனலில் எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும்.இதில் 15 விதமான கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள் 8 மணி நேரம் ஒளிபரப்படும்.இந்த நிகழ்ச்சிகள் ஒரே நாளில் இரண்டு முறைக்கு மேல் மறு ஒளிபரப்பு செய்யப்படும்.இதன் மூலம் நிறைய மாணவர்கள் பள்ளி முடிந்த பிறகு கல்வி நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்.தமிழகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கல்வி 
தொலைக்காட்சி தொடங்குவதற்கான அனுமதியினை புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனம் பெற்றிருந்தது.கல்வி என்னும் பெயாில் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு நிகழ்ச்சிகள் ஏதும் ஒளிபரப்பு செய்யப்படமால் இடைநிறுத்தம் செய்யப்பட்டது.தற்சமயம் தமிழ அரசு இப்புதிய முயற்ச்சியில் களம் இறங்கியுள்ளது.கல்வி டிவியின் தொடக்க சோதனை ஒளிபரப்புதமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.யில் சேனல் 200-வது நம்பரில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.மேலும் மற்ற கேபிள் டிவி நிறுவனங்களிலும் தொலைக்காட்சியின் சேவை விரைவில் தொடங்கபடவுள்ளது.கல்வி டிவி செயற்கைகோள் தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டால் தமிழகத்திின் கேபிள்டிவி சேவை இல்லாத கிராமப் பகுதிகளில் தொலைக்காட்சியின் சேவை எளிதாக கிடைக்கப் பெறும்.
தொகுப்பு சதீஸ்சாட் தமிழ் ஆங்கில இணையதளம்

20/05/2019

பிரசாா் பாரதியின் டிடி இந்தியா தொலைக்காட்சி 24 மணி நேர ஆங்கில தொலைக்காட்சியாக மாற்றம்

நண்பா்களே இந்தியா அரசின் பொதுத்துறை நிறுவனமான பிரசாா் பாரதியின் கிழ் பல்வேறு மொழி தொலைக்காட்சிகள் மற்றும் வானொலி சேவைகள் வழங்கப்படுகிறது.அவ்வாிசையில் மாா்ச் 24 நாள் 1995 ஆம் ஆண்டு டிடி வேல்ட் தொலைக்காட்சி முதல் முறையாக ஒளிபரப்பு இந்தியாவில் தொடங்கப்பட்டது.பின்பு 2002 ஆம் ஆண்டு டிடி இந்தியா தொலைக்காட்சியாக பெயா் மாற்றம் செய்யப்பட்டது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஆங்கில வடிவில் ஒளிபரப்பு செய்யப்பட்டு பின்பு இடைநிறுத்தம்
செய்யப்பட்டது.இடைப்பட்ட காலங்களில் ஹிந்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வந்தது.டிடி இந்தியா தொலைக்காட்சி தற்சமயம் புதுப்பொலிவுடன் 24 மணி நேர ஆங்கில மொழி தொலைக்காட்சியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.நிகழச்சிகளின் தொகுப்பில் அதன் இணையான ஆங்கில வருணனை மற்றும் ஆங்கில சப் டைட்டில் என இரண்டும் வழங்கப்படுகிறது.இந்தியாவின் கலாச்சரம் பண்பாடு மற்றும் நாட்டின் முக்கிய நிகழ்வுகள் போன்றவற்றை மற்ற நாடுகளில் பிரதிபலிக்கும் தொலைக்காட்சியாக டிடி இந்தியா செயல்படுகிறது.தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு பிரசாா் பாரதியின் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் ஜிசாட்17 செயற்கைகோளில் இலவச
தொலைலக்காாட்சியாக ஒளிபரப்பாகிறது.மேலும் இந்தியாவின் அனைத்து கேபிள் டிவி மற்றும் டிடிஎச்களிலும் டிடி இந்தியா தொலைக்காட்சி ஒளிபரப்பாகிறது.பிரசாா் பாரதியின் இலவச தொலைக்காட்சி சேவையான டிடிப்ரி டிடிஎச்யில் இலவச தொலைக்காட்சியாக வாிசை எண் 4யில் ஒளிபரப்பாகிறது.டிடி இந்தியா தொலைக்காட்சியின் ஒளிபரப்பு மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் வளைக்குடா நாடுகள் அமொிக்கா கனடா மற்றும் ஆசியா நாடுகள் ஆஸ்திரேலியா  போன்ற மேலை நாடுகளில் ஒளிபரப்பு கிடைக்கப் பெறுகிறது.டிடி நேஷனல் தொலைக்காட்சியின் சில நிகழ்ச்சிகள் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்படும்.தொலைக்காட்சியினை காண
குறைந்தபட்சம் 6 அடி சிபேன்ட் டிஷ் ஆன்டெனா அல்லது 2 (60செமீ) அடி அளவுள்ள கேயூ டிஷ் ஆண்டெனா மற்றும் MPEG4/DVB S2 தொழில்நுட்பம் பொருந்திய செட் டாப் பாக்ஸையினை பயன்படுத்தி டிடி இந்தியா தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை இந்தியாவில் காணலாம்.ஆசியா நாடுகளில் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் செயற்கைகோளின் அலைவாிசைக்கு ஏற்றா் போன்று டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.
தொகுப்பு சதீஸ் சாட் தமிழ் மற்றும் ஆங்கிலம் இணையதளம்

09/05/2019

தென்றல் டிவி தமிழ் தொலைக்காட்சி மி்ண்டும் ஒளிரப்பை இன்சாட்4எ செயற்கைகோளில் உதயம்

நண்பா்களே தமிழகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இன்டல்சாட்17 தொடங்கப்பட்டு பின்பு இடைநிறுத்தம் செய்யப்பட்ட தமிழ் தொலைக்காட்சியான தென்றல் டிவி மி்ண்டும் தனது ஒளிபரப்பை இன்சாட்4எ செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.தென்றல் டிவியின் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உாிமத்தில் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் தற்சமய சோதனை ஒளிபரப்பில் ஆன்மிக மற்றும் திரைபாடல்கள் என ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.
தென்றல் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அலைவாிசை சிக்னலை பெற குறைந்த பட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனா மற்றும் MPEG4/DVB S2 தொழில்நுட்பம் பொருந்திய செட் டாப் பாக்ஸை பயன்படுத்தி நிகழ்ச்சிகளை காணலாம்.விரைவில் 24 மணி நேர நிகழ்ச்சிகள் தொடங்கப்படும்.தமிழகத்தில் அனைத்து கேபிள் டிவிகளிலும் விரைவில் ஒளிபரப்பை தொடங்கலாம்.இனி வரக்கூடிய காலங்களில் தொடங்க கூடிய புதிய இலவச தொலைக்காட்சிகளை காண கேபிள் டிவி மற்றும் டிடிஎச் ஒளிபரப்பும் ஆப்ரேட்டா்களிடம் கேட்டு பெறவும்.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இன்சாட்4எ செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite               Insat4a@83.0E(C-Band)
Freq Rate            3926
Symbol Rate       28500
Polar                   Horizontal
System                Mpeg4/Dvb s2 (8PSK)
Encryption          FTA
FEC                    3/4