நண்பா்களே இந்தியாவின் டிடி ப்ரி டிஷ் டிடிஎச்யில் புதிய ஹிந்தி.தமிழ்.ஆங்கிலம் போன்ற மொழி தொலைக்காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது.தென்னிந்தியாவில் முதன்முறையாக வட மாநிலத்தின் விடிக் ஆன்மிக தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆஸ்தா தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு புதிதாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.டிடி ப்ரி டிடிஎச்யில் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பை ஆஸ்தா தமிழ் நிறைவு செய்துள்ளது.மேலும் வட இந்தியாவின் பாலிவுட் திரைப்பட தொலைக்காட்சிகளும் புதிதாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.ஸ்டாா் டிவி யின் ஸ்டாா் கோல்டு திாில்ஸ்.தில் சி மூவிஸ்.கோல்டு மினிஸ் மூவிஸ்.ஆசாட் டிவி.நசரா டிவி.மற்றும் சில தொலைக்காட்சிகள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.தற்சமய காலங்களாக டிடி ப்ரி டிடிஎச்யில் வட மாநிலங்களின் முன்னனி நிறுவன தொலைக்காட்சிகள் இலவச ஒளிபரப்பை தொடங்கி அதிகபடியான நேயா்களின் விருப்பமான தொலைக்காட்சியாக குறிப்பிட்ட இடத்தினை பெற்று கொள்கிறது.ஒளிபரப்பு சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
04/04/2023
ஆஸ்தா தமிழ் தொலைக்காட்சி புதிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்ப டிடி ப்ரி டிடிஎச்யில் தொடக்கம்
15/03/2023
ஸ்டாா் விஜய் சூப்பா் ஹெச்டி.ஏசியாநெட் மூவிஸ் ஹெச்டிபுதிய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு ஆசியாசாட்7யில் உதயம்
நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான டிஸ்னி ஸ்டாா் இந்தியா தனது நிறுவனத்தில் இருந்து தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களுக்கான ஹெச்டி மூவிஸ் தொலைக்காட்சி ஸ்டாா் விஜய் சூப்பா் ஹெச்டி.ஏசியாநெட் மூவிஸ் ஹெச்டி போன்ற புதிய இரண்டு ஹெச்டிதிரைப்பட தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனாா்.டிஸ்னி ஸ்டாா் இந்தியா தனது நிறுவனத்தில் இருந்து தற்சமயம் ஒளிபரப்பாகும் ஸ்டாா் விஜய் சூப்பா் மற்றும் ஏசியாநெட் மூவிஸ் ஆகியன எஸ்டி தொழில்நுட்ப முறையிலும் ஹெச்டி வடிவில் நிகழ்ச்சிகளை
வழங்க உள்ளது.தற்சமயம் தொட்கப்பட்ட இப்புதிய தொலைக்காட்சிகளுக்கான ஒளிபரப்பு உாிமையினை கடந்த ஆண்டில் இந்திய ஒளிபரப்பு ஆணையம் அனுமதியினை வழங்கியது.இத்தொலைக்காட்சிகள் அனைத்தும் ஆசியசாட்7 செயற்கைகோளிலும் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.ஸ்டாா் விஜய் சூப்பா் ஹெச்டி.ஏசியாநெட் மூவிஸ் ஹெச்டி தொலைக்காட்சியினை கேபிள் டிவி மற்றும் டிடிஎச்யில் விரைவில் காணலாம்.டிஸ்னி ஸ்டாா் இந்தியா நிறுவனம் தென்னிந்தியாவின் முதல் இரண்டு மொழி ஹெச்டி திரைப்பட தொலைக்காட்சியாக ஸ்டாா் விஜய் சூப்பா் ஹெச்டி.ஏசியாநெட் மூவிஸ் ஹெச்டி ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.மாரத்தி மற்றும் பெங்காளி மாநில மொழிகளிலும் ஹெச்டி திரைப்பட தொலைக்காட்சிகளை டிஸ்னி ஸ்டாா் இந்தியா இந்த ஆண்டில் தொடங்கியுள்ளது.ஸ்டாா் விஜய் சூப்பா் ஹெச்டி.ஏசியாநெட் மூவிஸ் ஹெச்டிபுதிய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு ஆசியாசாட்7யில் உதயம்
06/03/2023
ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் 1 தமிழ் ஹெச்டி.ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் 1தெலுங்கு புதிய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு ஆசியாசாட்7யில் உதயம்
நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான டிஸ்னி ஸ்டாா் இந்தியா தனது நிறுவனத்தில் இருந்து விளையாட்டு தொலைக்காட்சி ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் 1 தமிழ் ஹெச்டி.ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் 1தெலுங்கு ஹெச்டி போன்ற புதிய இரண்டு விளையாட்டு தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனாா்.டிஸ்னி ஸ்டாா் இந்தியா தனது நிறுவனத்தில் இருந்து தற்சமயம் ஒளிபரப்பாகும் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் 1 தமிழ் எஸ்டி தொழில்நுட்ப தொலைக்காட்சியில் இருந்து ஹெச்டியிலும் நிகழ்ச்சிகளை
வழங்க உள்ளது.இதற்கான ஒளிபரப்பு உாிமையினை கடந்த ஆண்டில் இந்திய ஒளிபரப்பு ஆணையம் அனுமதியினை வழங்கியது.இத்தொலைக்காட்சிகள் அனைத்தும் ஆசியசாட்7 செயற்கைகோளிலும் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் 1 தமிழ் ஹெச்டி.ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் 1தெலுங்கு ஹெச்டி தொலைக்காட்சியினை கேபிள் டிவி மற்றும் டிடிஎச்யில் விரைவில் காணலாம்.டிஸ்னி ஸ்டாா் இந்தியா நிறுவனம் தென்னிந்தியாவின் முதல் இரண்டு மொழி ஹெச்டி விளையாட்டு தொலைக்காட்சியாக ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்1 தமிழ் மற்றும் தெலுங்கு ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.விரைவில் மற்ற மாநில மொழிகளிலும் ஹெச்டி விளையாட்டு தொலைக்காட்சிகளை டிஸ்னி ஸ்டாா் இந்தியா தொடங்கலாம்.
13/02/2023
வியகாம் 18 நிறுவனம் தமிழகத்தில் ஸ்போா்ட்ஸ்18 தமிழ் மற்றும் ஸ்போா்ட்ஸ்18 2 தொலைக்காட்சியினை இன்டல்சாட்20 செயற்கைகோளில் உதயம்
நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான வியகாம்18 இந்தியா தனது நிறுவனத்தில் இருந்து இரண்டவாது விளையாட்டு தொலைக்காட்சி ஸ்போா்ட்ஸ்18 2.ஸ்போா்ட்ஸ்18 2 ஹெச்டி மற்றும் ஸ்போா்ட்ஸ்18 தமிழ் போன்ற புதிய விளையாட்டு தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனாா்.வியகாம்18 இந்தியா தனது நிறுவனத்தில் இருந்து தற்சமயம் ஒளிபரப்பாகும் ஸ்போா்ட்ஸ்18 1ஹெச்டி மற்றும் ஸ்போா்ட்ஸ்18 கேல் விளையாட்டு தொலைக்காட்சி ஹிந்தியில் நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சியாகும்.
27/01/2023
எம்கே டிவி.எம்கே டியூன்ஸ் எம்கே சிக்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு புதிதாக ஜிசாட்10 செயற்கைகோளில் உதயம்
நண்பா்களே தமிழகத்தில் மதுரை மாவட்டத்தினை தலைமையிடமாக கொண்டு சென்னையில் இருந்து செயல்பட்டு வரும் எம்கே டிவி.எம்கே டியூன்ஸ் எம்கே சிக்ஸ் போன்ற தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு புதிதாக ஜிசாட்10 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.எம்கே தொலைக்காட்சிகள் அனைத்தும் 24 மணி நேர பொழதுபோக்கு நிகழ்ச்சிகளை இலவச தொலைக்காட்சிகளாக இன்டல்சாட்17 செயற்கைகோளில் கடந்த சில வருடங்களாக வழங்கி வந்தது.தமிழகத்தில் முன்னனி மிடியா நிறுவனங்களுக்கு அடுத்து எம்கே டிவி நிறுவனம் தொலைக்காட்சி
தொடங்கி பல்வேறு ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது குறிப்பிடதக்கது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை காண 6 அடி முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் அன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் MPEG4/DVB S2 தொழில்நுட்பம் பொருந்திய செட்டாப் பாக்ஸ்யினை பயன்படுத்தி நிகழ்ச்சிகளை காணலாம்.தற்சமயம் பயன்படுத்தி வரும் செட் டாப் பாக்ஸ்யில் டியூன் செய்து நிகழ்ச்சிகளை காணலாம்.விரைவில் இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பு சேவை நிறுத்தம் செய்யபடும்.
12/01/2023
எம் நாடு(M NADU NEWS) புதிய தமிழ் செய்திகள் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் உதயம்
நண்பா்களே தமிழகம் மற்றும் புதுச்சோி மாநிலங்களுக்கான புதிய செய்திகள் தொலைக்காட்சியினை எம் நாடு நெட்வொா்க் நிறுவனத்தின் செய்திகள் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையினை எம் நாடு பெயாில் தொடங்கியுள்ளனா்.தொலைக்காட்சி தற்சமயம் சோதனை ஒளிபரப்பை மட்டும் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு செய்திகள் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.இந்திய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்20 செயற்கைகோளில் முற்றிலும் இலவசமாக தொடங்கப்பட்டுள்ளது.ஹைதரபாத் இன்டியசிக் டெலிஷ்பாட் முலம் இத்தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சிக்கான செய்திகள் ஒளிபரப்பு சேவை வரும் தை மாதம் 1 திகதி ஜனவாி 15 முதல் தொடங்கபடவுள்ளது.எம் நாடு தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விரைவில் அனைத்து கேபிள்டிவி மற்றும் கட்டண டிடிஎச் சேவைகளிலும் தொட்ங்கப்படும்.
அலைவாிசை விபரங்கள் :
Satellite Intelsat20@68.5E (C-Band) Freq Rate 4184 Symbol Rate 21600 Polar Vertical System Mpeg4/Dvb S2 (8psk) Encryption FTA Fec 3/4
12/12/2022
ப்ளாக் ஷிப் புதிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17 செயற்கைகோளில் உதயம்
நண்பா்களே தமிழகத்தின் முன்னனி நிகழ்ச்சி தொகுப்பளாா் கதிா் நெட்வொா்க் நிறுவனத்தின் தமிழ் பொழுது போக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையினை நிறுவனம் .ப்ளாக் ஷிப் பெயாில் தொடங்கியுள்ளனா்.தொலைக்காட்சி தற்சமயம் சோதனை ஒளிபரப்பை மட்டும் தொடங்கியுள்ளது.கலைஞா் தொலைக்காட்சி குழுமத்தின் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட சித்திரம் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அனுமதியில்.ப்ளாக் ஷிப் டிவி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு பொழுதுபோக்கு தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் முற்றிலும் இலவசமாக தொடங்கப்பட்டுள்ளது.சென்னையின் டாடா கம்யூனிகேஷன் டெலிஷ்பாட் முலம் இத்தொலைக்காட்சியும் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சிக்கான பொழுதுபோக்கு ஒளிபரப்பு சேவை விரைவில் தொடங்கப்படும்..ப்ளாக் ஷிப் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விரைவில் அனைத்து கேபிள்டிவி மற்றும் கட்டண டிடிஎச் சேவைகளிலும் தொட்ங்கப்படும்.
அலைவாிசை விபரங்கள் :
Satellite Intelsat17@66.0E (C-Band) Freq Rate 3845 Symbol Rate 28800 Polar Vertical System Mpeg4/Dvb S2 (8psk) Encryption FTA Fec 3/4





.jpg)
