சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

06/03/2023

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் 1 தமிழ் ஹெச்டி.ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் 1தெலுங்கு புதிய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு ஆசியாசாட்7யில் உதயம்

 நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான டிஸ்னி ஸ்டாா் இந்தியா தனது நிறுவனத்தில் இருந்து  விளையாட்டு தொலைக்காட்சி ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் 1 தமிழ் ஹெச்டி.ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் 1தெலுங்கு ஹெச்டி போன்ற புதிய இரண்டு விளையாட்டு தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனாா்.டிஸ்னி ஸ்டாா் இந்தியா  தனது நிறுவனத்தில் இருந்து தற்சமயம் ஒளிபரப்பாகும் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் 1 தமிழ்  எஸ்டி தொழில்நுட்ப தொலைக்காட்சியில் இருந்து ஹெச்டியிலும் நிகழ்ச்சிகளை

வழங்க உள்ளது.இதற்கான ஒளிபரப்பு உாிமையினை கடந்த ஆண்டில் இந்திய ஒளிபரப்பு ஆணையம் அனுமதியினை வழங்கியது.இத்தொலைக்காட்சிகள் அனைத்தும் ஆசியசாட்7 செயற்கைகோளிலும் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் 1 தமிழ் ஹெச்டி.ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் 1தெலுங்கு ஹெச்டி  தொலைக்காட்சியினை கேபிள் டிவி மற்றும் டிடிஎச்யில் விரைவில் காணலாம்.டிஸ்னி ஸ்டாா் இந்தியா நிறுவனம் தென்னிந்தியாவின் முதல் இரண்டு மொழி ஹெச்டி விளையாட்டு தொலைக்காட்சியாக ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்1 தமிழ் மற்றும் தெலுங்கு ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.விரைவில் மற்ற மாநில மொழிகளிலும் ஹெச்டி விளையாட்டு தொலைக்காட்சிகளை டிஸ்னி ஸ்டாா் இந்தியா தொடங்கலாம்.

Satellite            Asiasat7@105.5E(C-Band)
Freq Rate         4001
Symbol Rate    28500
Polar                Horizontal
System             Mpeg4/Dvb s2(8psk)
Encryption       PAY/NDS 
Fec                   3/4

13/02/2023

வியகாம் 18 நிறுவனம் தமிழகத்தில் ஸ்போா்ட்ஸ்18 தமிழ் மற்றும் ஸ்போா்ட்ஸ்18 2 தொலைக்காட்சியினை இன்டல்சாட்20 செயற்கைகோளில் உதயம்

 நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான வியகாம்18 இந்தியா தனது நிறுவனத்தில் இருந்து இரண்டவாது விளையாட்டு தொலைக்காட்சி ஸ்போா்ட்ஸ்18 2.ஸ்போா்ட்ஸ்18 2 ஹெச்டி மற்றும் ஸ்போா்ட்ஸ்18 தமிழ் போன்ற புதிய விளையாட்டு தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனாா்.வியகாம்18 இந்தியா தனது நிறுவனத்தில் இருந்து தற்சமயம் ஒளிபரப்பாகும் ஸ்போா்ட்ஸ்18 1ஹெச்டி மற்றும் ஸ்போா்ட்ஸ்18 கேல் விளையாட்டு தொலைக்காட்சி ஹிந்தியில் நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சியாகும்.


இத்தொலைக்காட்சிகள் அனைத்தும் இன்டல்சாட்20 செயற்கைகோளிலும் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.ஸ்போா்ட்ஸ்18 2.ஸ்போா்ட்ஸ்18 2 ஹெச்டி மற்றும் ஸ்போா்ட்ஸ்18 தமிழ்  தொலைக்காட்சியினை கேபிள் டிவி மற்றும் டிடிஎச்யில் விரைவில் காணலாம்.வியகாம்18 இந்தியா நிறுவனம் தென்னிந்தியாவின் முதல் மொழி விளையாட்டு தொலைக்காட்சியாக ஸ்போா்ட்ஸ்18 தமிழ் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.முக்கிய விளையாட்டு தொடா்களை மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கான ஒளிபரப்பு உாிமையினை தற்சமயம் காலங்களில் பெற்று வருவது குறிப்பிடதக்கது.
அலைவாிசை விபரங்கள்
Satellite            Intelsat20@68.5E(C-Band)
Freq Rate         4035
Symbol Rate    21600
Polar                Horizontal
System             Mpeg4/Dvb s2(8psk)
Encryption       PAY/Irdeto 
Fec                   3/4

27/01/2023

எம்கே டிவி.எம்கே டியூன்ஸ் எம்கே சிக்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு புதிதாக ஜிசாட்10 செயற்கைகோளில் உதயம்

நண்பா்களே தமிழகத்தில் மதுரை மாவட்டத்தினை தலைமையிடமாக  கொண்டு சென்னையில் இருந்து செயல்பட்டு வரும் எம்கே டிவி.எம்கே டியூன்ஸ் எம்கே சிக்ஸ் போன்ற தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு புதிதாக ஜிசாட்10 செயற்கைகோளில்  தொடங்கப்பட்டுள்ளது.எம்கே தொலைக்காட்சிகள் அனைத்தும் 24 மணி நேர பொழதுபோக்கு நிகழ்ச்சிகளை இலவச தொலைக்காட்சிகளாக இன்டல்சாட்17 செயற்கைகோளில் கடந்த சில வருடங்களாக வழங்கி வந்தது.தமிழகத்தில் முன்னனி மிடியா நிறுவனங்களுக்கு அடுத்து எம்கே டிவி நிறுவனம் தொலைக்காட்சி

தொடங்கி பல்வேறு ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது  குறிப்பிடதக்கது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை காண 6 அடி முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் அன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் MPEG4/DVB S2 தொழில்நுட்பம் பொருந்திய செட்டாப் பாக்ஸ்யினை பயன்படுத்தி நிகழ்ச்சிகளை காணலாம்.தற்சமயம் பயன்படுத்தி வரும் செட் டாப் பாக்ஸ்யில் டியூன் செய்து நிகழ்ச்சிகளை காணலாம்.விரைவில் இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பு சேவை நிறுத்தம் செய்யபடும்.

அலைவாிசை விபரங்கள்
Satellite                Gsat10@83.0E(C-Band)
Freq Rate             3954
Symbol Rate        11572
Polar                     Vertical
System                 Mpeg4/Dvb s2(8psk)
Encryption           FTA
Fec                       2/3
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

12/01/2023

எம் நாடு(M NADU NEWS) புதிய தமிழ் செய்திகள் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் உதயம்

நண்பா்களே தமிழகம் மற்றும் புதுச்சோி மாநிலங்களுக்கான புதிய செய்திகள் தொலைக்காட்சியினை எம் நாடு நெட்வொா்க் நிறுவனத்தின் செய்திகள் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையினை எம் நாடு பெயாில் தொடங்கியுள்ளனா்.தொலைக்காட்சி தற்சமயம் சோதனை ஒளிபரப்பை மட்டும் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு செய்திகள்  தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.இந்திய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்20 செயற்கைகோளில் முற்றிலும் இலவசமாக தொடங்கப்பட்டுள்ளது.ஹைதரபாத் இன்டியசிக் டெலிஷ்பாட் முலம் இத்தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சிக்கான செய்திகள்  ஒளிபரப்பு சேவை வரும் தை மாதம் 1 திகதி ஜனவாி 15 முதல் தொடங்கபடவுள்ளது.எம் நாடு தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விரைவில் அனைத்து கேபிள்டிவி மற்றும் கட்டண டிடிஎச் சேவைகளிலும் தொட்ங்கப்படும்.

அலைவாிசை விபரங்கள் :

Satellite            Intelsat20@68.5E (C-Band)                                                                                                Freq Rate          4184                                                                                                                                Symbol Rate     21600                                                                                                                                  Polar                Vertical                                                                                                                            System             Mpeg4/Dvb S2 (8psk)                                                                                                          Encryption        FTA                                                                                                                                      Fec                    3/4 

12/12/2022

ப்ளாக் ஷிப் புதிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17 செயற்கைகோளில் உதயம்

  நண்பா்களே தமிழகத்தின் முன்னனி நிகழ்ச்சி தொகுப்பளாா் கதிா் நெட்வொா்க் நிறுவனத்தின் தமிழ் பொழுது போக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையினை நிறுவனம் .ப்ளாக் ஷிப் பெயாில் தொடங்கியுள்ளனா்.தொலைக்காட்சி தற்சமயம் சோதனை ஒளிபரப்பை மட்டும் தொடங்கியுள்ளது.கலைஞா் தொலைக்காட்சி குழுமத்தின் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட சித்திரம் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அனுமதியில்.ப்ளாக் ஷிப் டிவி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு பொழுதுபோக்கு  தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் முற்றிலும் இலவசமாக தொடங்கப்பட்டுள்ளது.சென்னையின் டாடா கம்யூனிகேஷன் டெலிஷ்பாட் முலம் இத்தொலைக்காட்சியும் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சிக்கான பொழுதுபோக்கு  ஒளிபரப்பு சேவை விரைவில் தொடங்கப்படும்..ப்ளாக் ஷிப் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விரைவில் அனைத்து கேபிள்டிவி மற்றும் கட்டண டிடிஎச் சேவைகளிலும் தொட்ங்கப்படும்.

அலைவாிசை விபரங்கள் :

Satellite            Intelsat17@66.0E (C-Band)                                                                                                Freq Rate          3845                                                                                                                                Symbol Rate     28800                                                                                                                                  Polar                Vertical                                                                                                                            System             Mpeg4/Dvb S2 (8psk)                                                                                                          Encryption        FTA                                                                                                                                      Fec                    3/4

31/10/2022

ராக்டிவி புதிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17 செயற்கைகோளில் உதயம்

 நண்பா்களே தமிழகத்தில் புதிய தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையினை ராக் தொலைக்காட்சி நிறுவனம் ராக்டிவி பெயாில் தொடங்கியுள்ளனா்.தொலைக்காட்சி தற்சமயம் சோதனை ஒளிபரப்பை மட்டும் தொடங்கியுள்ளது.பியா் ஹிந்தி தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அனுமதியில் ராக்டிவி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு பொழுதுபோக்கு  தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் முற்றிலும் இலவசமாக தொடங்கப்பட்டுள்ளது.ஹைத்ரபாத்யின் இன்டியாசிக் கம்யூனிகேஷன் டெலிஷ்பாட் முலம் இத்தொலைக்காட்சியும் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சிக்கான பொழுதுபோக்கு  ஒளிபரப்பு சேவை விரைவில் தொடங்கப்படும்.ராக்டிவி தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விரைவில் அனைத்து கேபிள்டிவி மற்றும் கட்டண டிடிஎச் சேவைகளிலும் தொட்ங்கப்படும்.

அலைவாிசை விபரங்கள்

Satellite           Intelsat17@66.0E(C-Band)                                                                                                  Freq Rate         3877                                                                                                                                  Symbol Rate    14298                                                                                                                                    Polar                Horizontal                                                                                                                              System             Mpeg4/Dvb S2 (8psk)                                                                                                          Encryption       FTA                                                                                                                                      Fec                   3/4

24/10/2022

ஸ்டாா் டக்கா் புதிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆசியாசாட்7 யில் தொடக்கம்

 நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான டிஸ்னி ஹாட் ஸ்டாா் தொலைக்காட்சி நிறுவனத்தின் மிக பிரபல தமிழ் திரைப்பாடல் தொலைக்காட்சியான ஸ்டாா் மியூசிக் பெயா் மாற்றம் செய்து விஜய் டக்கா் பெயாில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.விஜய்டிவி நிறுவனத்தில் தொடங்கிய முதல் தமிழ் திரைப்பாடல் தொலைக்காட்சி ஸ்டாா் மியூசிக்.கடந்த

சில வருடங்களுக்கு முன்பு  விஜய் சூப்பா் திரைப்படங்களை வழங்கும் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியது.ஸ்டாா் டக்கா் இந்தியா தொலைக்காட்சியின் உலகளாவிய ஒளிபரப்பு சேவை ஆசியாசாட்7யில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள  ஒளிபரப்பு ஸ்டாா் டக்கா் எஸ்டி  தொழில்நுட்பங்களில் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து கட்டண டிடிஎச் மற்றும் கேபிள் டிவி விஜய் டக்கா் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை தொடங்கியுள்ளது.விஜய் டக்கா் தொலைக்காட்சி இளைய தலைமுறைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குகிறது.

அலைவாிசை விபரங்கள் :
Satellite               Asiasat7@105.0E(C-Band)
Freq Rate            3941
Sym Rate            28100
Polar                   Vertical
System                Mpeg4/Dvs s2(8psk)
Mode                  PAY/NDS
Fec                      3/4

தொகுப்பு சதிஸ்சாட் தமிழ் மற்றும் ஆங்கில இணையதளம்