சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

23/04/2017

ஷாப் சிஜே தமிழ் (SHOP CJ TAMIL TV) தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20 செயற்கைகோள்க்கு மாற்றம்

நண்பர்களே தமிழகத்தில் நான்காவது புதிய டெலி ஷாப்பிங் தமிழ் தொலைக்காட்சியை இந்தியாவின் மிக பெரிய டெலி ஷாப்பிங் நிறுவனம் சிஜே அலைவ் ஷாப் சிஜே தமிழ் என்ற பெயரில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு இந்தியாவின் இன்சாட்4எ செயற்கைகோளில் ஆசீர்வாத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமத்தில் முதன்முதலாக தொடங்கப்பட்டது.ஷாப் சிஜே அலைவ் நிறுவனத்தின் தென் மாநிலங்களுக்கான இரண்டவாது தொலைக்காட்சி 
இதுவாகும்.கடந்த வருடத்தில் ஆந்திர மற்றும் தெலுங்கான மாநிலத்திற்கு புதிய ஷாப்பிங் சிஜே தெலுங்கு தொலைக்காட்சியை தொடங்யிருந்தது.ஷாப் சிஜே தமிழ் இலவச தொலைக்காட்சி இன்டல்சாட்20 செயற்கைகோளுக்கு ஒளிபரப்பு மாற்றம் செய்யப்படுகிறது.தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் Mpeg4/Dvb s2 தொழில்நுட்ப செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்த வேண்டும்.

அலைவரிசை விபரங்கள்:
Satellite             Intelsat20@68.5E(C-Band)
Freq Rate          3790
Symbol Rate     7200
Polar                 Horizontal
Modulation        Mpeg4/Dvb s2
Mode                Fta

14/04/2017

சோனி யா(SONY YAY TAMIL) தமிழ் மொழியில் புதிய காா்டூன் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆசியாசாட்7யில் உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான சோனி பிக்சா்ஸ் குழந்தைகளுக்கான  புதிய காா்டூன் தொலைக்காட்சி சோனி யா என்ற பெயாில் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது.சோனி யா தொலைக்காட்சி தமிழ் மொழியிலும் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.இதை தவிர ஹிந்தி தெலுங்கு போன்ற
மொழிகளிலும் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.24 மணி நேர காா்டூன் நிகழ்ச்சிகளை வழங்ககூடிய இத்தொலைக்காட்சி சோனி பிக்சா்ஸ் நிறுவனத்தின் முதல் தொலைக்காட்சியாகும்.கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை அனிமேக்ஸ் தொலைக்காட்சியின் மூலம் நிகழ்ச்சிகள் இந்தியாவில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது.தற்சமயம் அத்தொலைக்காட்சியின் சோனி யா  என்று பெயா் மாற்றம் செய்யப்படுகிறது.
கட்டண தொலைக்காட்சி ஆசியாசாட்7 செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் 24 மணி நேரம் நிகழச்சிகள் தொடங்கப்பட்டு தமிழகத்தின் முன்னனி கேபிள் மற்றும் கட்டண டிடிஎச் சேவைகளிலும் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தொடங்கப்படலாம்.
Parameter Details:
Satellite               ASIASAT7@105.5E(C-Band)
Freq Rate            4180
Symbol Rate       30000
Polar                  Horizontal
System               Mpeg4/DVB S1
Encryption         Pay/Power uv,NDS
FEC                    5/6

03/04/2017

டென் ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சிகள் சோனி டென்1,2,3 மற்றும் சோனி கோல்ப் ஹெச்டி பெயாில் ஒளிபரப்பு தொடக்கம்

நண்பா்களே இந்தியாவின் மிக முன்னனி விளையாட்டு தொலைக்காட்சியான டென் ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சியின் அதி நவின தொழில்நுட்ப தொலைக்காட்சியான டென் 1 ஹெச்டி மற்றும் டென் கோல்ப் ஹெச்டி தொலைக்காட்சி புதிய செயற்கைகோளில் சோனி டென்1 ஹெச்டி.சோனி டென் கோல்ப் ஹெச்டி என்ற பெயரில் புதிய ஒளிபரப்பை ஆசியாசாட்7 செயற்கைகோளில் தொடங்கியுள்ளது.ஜி குழுமம் மற்றும் தாஜ் டிவியின் கிழ் செயல்பட்டு வந்த டென் ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சிகளை கடந்த வருடத்தில் சோனி பிக்சா் நிறுவனம் விலைக்கு வாங்கியது.சோனி நிறுவனத்தின் தொலைக்காட்சி துறையில் முன்னனி விளையாட்டு தொலைக்காட்சியினை
தன் வசபடுத்தி  இந்தியாவில் பாா்வையளாா்களின் எண்ணிக்கையினை உயா்தி வருகிறது.மேலும் சோனி நிறுவனம் கடந்த வருடத்தில் சோனி ஈஎஸ்பின் தொலைக்காட்சியினை இந்தியாவில் தொடங்கியிருந்தது குறிப்பிடதக்கது.டென்1 டென்2 டென்3 தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பும் விரைவில் சோனி நிறுவனத்தின் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் அலைவாிசைகளுக்கு மாற்றப்படலாம்.தற்சமயம் இத்தொலைக்காட்சிகள் அனைத்தும் ஜி குழுமத்தின் இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பாகி வருகிறது. டென் 1 ஹெச்டி மற்றும் டென் கோல்ப் ஹெச்டி தொலைக்காட்சி தொலைக்காட்சிகளின் பழைய ஔிபரப்பு விரைவில் நிறுத்தப்பட்டு சோனி பிக்சா்ஸ் நிறுவனத்தின் புதிய செட் டாப் பாக்ஸ்யில் ஒளிபரப்பு பெறலாம்.கட்டண தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பை 
தொடங்கியுள்ளது.இந்தியாவில் பிரபல விளையாட்டு தொடா்களை ஒளிபரப்புவதில் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் நிறுவனத்திற்கு அடுத்த மிக பொிய விளையாட்டு தொலைக்காட்சி நிறுவனம் சோனி பிக்சா்ஸ் ஆகும்.சோனி பிக்சா்ஸ் நிறுவனம் சோனி சிக்ஸ் மற்றும் சோனி ஈஎஸ்பிஎன் தொலைக்காட்சிகளின் விளையாட்டு தொடா்களை ஒளிபரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
அலைவாிசை விபரங்கள்;
Satellite                 Asiasat7@105.5E(C-Band)
Freq Rate              4180
Symbol Rate         30000
Polar                     Vertical
System                  HD.Mpeg4/Dvb s2
Encryption            Pay/NDS/Power uv
FEC                      3/4

02/04/2017

விவா ஐபில் 10 ஆண்டு கிாிக்கெட் போட்டி தொடா்கள் தமிழ் மொழியில் சோனி ஈஎஸ்பின் ஒளிபரப்பு

நண்பா்களே மிக பிரபலமான விளையாட்டு போட்டியான ஐபிஎல் கிாிக்கெட் தொடா்கள் வரும் ஏப்ரல் 10திகதி முதல் தொடங்கப்படவுள்ளது.இந்தியாவில் நடைபெறும் தொடா்களை ஒளிபரப்பும் அனுமதியினை சோனி பிக்சா்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.சோனி நிறுவனத்தின் சோனி சிக்ஸ் மற்றும் சோனி ஈஎஸ்பின் ஹெச்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.போட்டி
தொடா்கள் அனைத்தும் ஆங்கிலம்.ஹிந்தி.பெங்காளி.தெலுங்கு மற்றும் தமிழ் 
மொழிகளில் ஒளிபரப்பாவுள்ளது.கடந்த ஐபிஎல் போட்டி தொடா்கள் அனைத்தும் சோனி சிக்ஸ் மற்றும் சோனி மேக்ஸ் தொலைக்காட்சிகளில் மட்டும் ஒளிபரப்பாகியது.தற்சமயம் சோனி பிக்சா்ஸ் நிறுவனத்தின் செயற்கைகோள் தொலைக்காட்சிகள் அனைத்தும் இன்டல்சாட்17 மற்றும் இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பாகி வருகிறது.தமிழ் மொழிக்கான தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சிகள் அனைத்தும் கட்டண தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பாகிறது.
அலைவாிசை விபரங்கள்
Satellite            IS20@68.5 & IS17@66.0(C-Band)
Freq Rate         3900(SD)         3845(HD)
Symbol Rate    22222              30000
Polar                Horizontal       Horizontal
System             Mpeg4/dvb s2
Encryption       Pay/NDS/Power vu

25/03/2017

ஹெச்பி ஒ ஹெச்டி தொலைக்காட்சி இலவச ஒளிபரப்பாக ஜிசாட்15 செயற்கைகோளில்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி ஆங்கில திரைப்பட தொலைக்காட்சியான ஹெச்பிஒ ஹெச்டி தொலைக்காட்சி இலவச ஒளிபரப்பாக ஜிசாட்15 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.சன் ஹெச்டி டிடிஎச் ஒளிபரப்பு அலைவாிசையில் ஹெச்பிஒ தொலைக்காட்சி 
ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சியின் ஆடியோ உயா் தொழில்நுட்பமான டொல்பி டிஜிட்டல் 5.1 தரத்தில் வழங்குகிறது.மிக பிரபலமான ஆங்கில படங்களை ஒளிபரப்புகிறது.ஹெச்டி செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்தி தொலைக்காட்சியின் நிகழச்சிகளை காணலாம்.தற்காலி இலவச ஒளிபரப்பாக கடந்த 2 வாரங்களாக ஒளிபரப்பாகிறது.
அலைவாிசை விபரங்கள்
Satellite             GSAT15@93.0E(KU-Band)
Freq Rate         10970
Symbol Rate     32000
Polar                 Vertical
System             HD.Mpeg4/DVB S2
Encryption        FTA

10/03/2017

தமிழகத்தில் சாய்டிவி(SAI TV TAMIL) புதிய ஆன்மிக தமிழ் பக்தி தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17 உதயம்

நண்பா்களே தமிழகத்தில் புதிய ஆன்மிக பக்தி தமிழ் தொலைக்காட்சி சாய் டிவி என்ற பெயாில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனாா்.இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ள சாய்டிவியின் சோதனை ஒளிபரப்பு தமிழ் பக்தி பாடல்களுடன் மற்றும் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களின் ஆராதனை நிகழ்வுகளுடன் ஒளிபரப்பாகிறது.சாய்டிவியின் ஒளிபரப்பை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை 
பயன்படுத்த வேண்டும்.மேலும் MPEG4/DVB S2 தொழில்நுட்பம் பொருந்திய செட் டாப் பாக்ஸை பயன்படுத்தி சாய் டிவியின் நிகழ்ச்சிகளை காணலாம்.தமிழ் மொழியில் 24 மணி நேர முதல் பக்தி தொலைக்காட்சியாக சாய் டிவி ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் 2 என்ற பெயாில் தமிழ் பக்தி தொலைக்காட்சியினை தொடங்கியிருந்ததை நமது சதிஸ் சாட் தமிழ் தளத்தில் இடம் பெற்றிருந்ததை காணக்கூடியதாக 
இருந்தது.சாய் டிவியின் நிகழ்ச்சிகள் விரைவில் தமிழகத்தின் முன்னனி கேபிள் மற்றும் கட்டண டிடிஎச்களிலும் இடம் பெறலாம்.சிரடி ஸ்ரீ சாய் ராம் திருக்கோவிலின் 4 பூஜை ஆராதனை நிகழ்ச்சிகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.சாய்ராம் கல்வி குழுமத்தின் தொலைக்காட்சியான சாய்ராம் டிவியின் ஒளிபரப்பும் .சாய்டிவியின் அலைவாிசையில் ஒளிபரப்பாகிறது குறிப்பிடதக்க செய்தியாகும்.சாய்டிவி முற்றிலும் இலவச தொலைக்காட்சியாக இன்டல்சாட்17யில் ஒளிபரப்பாகிறது.
அலைவாிசை விபரங்கள்
Satellite                  Intelsat17@66.0E(C-Band)
Freq Rate               3844
Symbol Rate          28800
Polar                      Vertical
System                   Mpeg4/Dvb s2(8psk)
Encryption             FTA
Fec                         3/4

01/03/2017

விஜய் சூப்பா் தமிழ் தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு ஆசியாசாட்7 க்கு மாற்றம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி செயற்கைகோள் தொலைக்காட்சி குழுமான ஸ்டாா் டிவி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது தமிழ் தொலைக்காட்சியான விஜய் சூப்பா் தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள்  ஒளிபரப்பு  புதிய செயற்கைகோளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஸ்டாா் டிவி இந்தியாவின் மற்ற மொழி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் ஆசியாசாட்7 செயற்கைகோளில் தொடங்கியுள்ளனா்.ஸ்டாா் விஜய் ஹெச்டி தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் செயற்கைகோளில் புதிய ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.விஜய் சூப்பா்
தொலைக்காட்சியின்“முதல் ஒளிபரப்பு முதன் முதலாக இன்டல்சாட்17 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக கடந்த வருடத்தில் தொடங்கப்பட்டது.தற்சமயம் காலங்களில் ஸ்டாா் டிவியின் தொலைக்காட்சிகள் அனைத்தும் ஆசியாசாட்7 செயற்கைகோளுக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.கடந்த மாதத்தில் தெலுங்கு தொலைக்காட்சியாக மா டிவியின் அனைத்து தொலைக்காட்சிகளும் மாற்றம் செய்யப்பட்டது.தற்சமயம் இன்டல்சாட்17யில் ஒளிபரப்பாகி வரும் விஜய் சூப்பா் டிவியின் ஒளிபரப்பு விரைவில் இடைநிறுத்தம் செய்யப்படும்.மேலும் கட்டண தொலைக்காட்சியாக ஆசியாசாட்7 செயற்கைகோளில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.விஜய் சூப்பா் தொலைக்காட்சியின் டிகோடா் செட் டாப் பாக்யை ரீ டியூன் செய்து புதிய ஒளிபரப்பை பெறலாம்.இப்புதிய ஒளிபரப்பு அலைவாிசையின் சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 16  அடி சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite                  Asiasat7@105.0E(C-Band)
Freq Rate               4020
Symbol Rate          28100 
Polar                      Vertical
System                   Mpeg4/Dvb s2
Encryption             PAY/NDS
FEC                       3/4