சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

09/04/2016

கலைஞர் சிரிப்பொலி.ஜி தமிழ் இந்திய தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு டயலாக் டிடிஎச்யில் தொடக்கம்

நண்பர்களே இலங்கையின் முன்னனி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் டிடிஎச் சேவையான டயலாக் டிடிஎச்யில் தமிழ் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.இவற்றில் இலங்கை நாட்டு தமிழ் தொலைக்காட்சிகள் 
அல்லாது இந்திய தமிழ் தொலைக்காட்சிகளான சன்டிவி.கேடிவி.கலைஞர் டிவி.சன் மியூசிக்.ஸ்டார் விஜய் போன்ற தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வந்தது.அவ்வரிசையில் மேலும் இரண்டு புதிய தமிழ் தொலைக்காட்சிகள் கலைஞர் சிரிப்பொலி.ஜி தமிழ் தொடங்கப்பட்டுள்ளது.தற்சமயம் மொத்தம் 12 
தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.தொலைக்காட்சிகள் கட்டண தொலைக்காட்சிகளாக சோதனை ஒளிபரப்பை இன்டல்சாட்12 செயற்கைகோளில் தொடங்கியுள்ளனர்.இப்புதிய தொலைக்காட்சிகள் தமிழ் பேசிக் தொலைக்காட்சி தொகுப்புயில் இடம் பெறலாம்.

06/04/2016

தமிழகத்தில் ஸ்டார் விஜய்(STAR VIJAY HD) புதிய ஹெச்டி தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆசியாசாட்7யில் உதயம்

நண்பர்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சிகளை ஒளிபரப்பும் நிறுவனமான ஸ்டார் டிவி நெட்வொா்க்யின் தமிழ் மொழி தொலைக்காட்சியும் மற்றும் தமிழகத்தின் மிக முன்னனி தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான  ஸ்டார் விஜய் டிவி கடந்த பல வருடங்களாக மிக எளிய தொழில்நுட்பமான எஸ் டி விடியோ ஒளிபரப்பில் ஒளிபரப்பாகி வந்தது.ஸ்டார் டிவி நிறுவனத்தின் முன்னனி 
தொலைக்காட்சிகள் அதி நவின தொழில்நுட்பமான ஹெச்டியில் தற்சமயம் காலங்களில் தொடங்கப்பட்டு வருகிறது.அவ்வரிசையில் தமிழில் நான்கவாது பொழுது போக்கு தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியாக ஸ்டார் விஜய் டிவி ஹெச்டி தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு ஆசியாசாட்7 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.இதே அலைவரிசையில் ஸ்டார் ஜால்வா மற்றும் ஸ்டார் பிரவா போன்ற ஹெச்டி தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு டிடிஎச் மற்றும் கேபிள் ஒளிபரப்பில் விரைவில் இடம் பெறும்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                    Asiasat7@105.0E(C-Band)
Freq Rate                 3800
Symbol Rate            28100
Polar                        Horizontal
Modulation              HD.Mpeg4/Dvb s2
Mode                       Pay/NDS

நீயூஸ்18 தமிழ் (NEWS18 TAMIL NEWS TV) புதிய தமிழ் செய்திகள் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் தொடக்கம்

நண்பர்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு மற்றும் செய்திகள் தொலைக்காட்சி நிறுவனமான நெட்வொர்க் 18 தென்னிந்தியாவில் செய்திகள் தொலைக்காட்சியினை ஆந்திரா மாநிலத்தின் ஈ டிவி நிறுவனத்துடன் இணைந்து தெலுங்கு.கன்னடா.பெங்காளி.மற்றும் ஹிந்தி மொழிகளில் செய்தி தொலைக்காட்சிகளை கடந்த ஆண்டில் தொடங்கியது.தற்சமயம் தமிழ் 
மற்றும் மலையாளம்.நார்த் ஈஸ்ட் மொழிகளில் செய்திகள் தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனர்.நீயூஸ் 18 தமிழ்.நீயூஸ் 18 மலையாளம்.நீயூஸ்18 அசாம் ஆகிய மூன்று தொலைக்காட்சிகளின் செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்20 செயற்கைகோளில் நெட்வொர்க் 18யின் தொலைக்காட்சிகளின் அலைவரிசையில் தொடங்கப்பட்டுள்ளது.கட்டண தொலைக்காட்சிகளாக சோதனை ஒளிபரப்பை 
மூன்று தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சிகள் அலைவரிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.விரைவில் நீயூஸ்18 தமிழ் தொலைக்காட்சி கேபிள் மற்றும் கட்டண டிடிஎச் சேவையில் ஒளிபரப்பு தொடங்கலாம்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                   Intelsat20@68.5E(C-Band)
Freq Rate                4035
Symbol Rate           21600
Polar                       Vertical
Modulation             Mpeg4/Dvb s2
Mode                      Pay/Irdeto 2

01/04/2016

மெட்ராஸ் டிவி( MADRAS TV TAMIL ) புதிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்சாட்4எ செயற்கைகோளில் உதயம்

நண்பர்களே தமிழகத்தில் மெட்ராஸ் டிவி என்னும் பெயரில் புதிய செயற்கைகோள் தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.உத்திர பிரதேச ஹிந்தி தொலைக்காட்சியான விண்டிவி யுபியின் செயற்கைகோள் ஒளிபரப்பு உரிமத்தில் தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.கடந்த சில வருடங்களாக 
மெட்ராஸ் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட உரிமத்தில் ஆசிீர்வாதம் தொலைக்காட்சியின் பிளாசிங் கிங்ஸ் குழந்தைகள் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு பின்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள இப்புதிய தமிழ் தொலைக்காட்சியில் தமிழ் பாடல்கள் சோதனை ஒளிபரப்பின் அடிப்படையில் ஒளிபரப்பாகிறது.மெட்ராஸ் டிவியின் அலைவரிசை சிக்னலை பெற 
குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சிபேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் MPEG4/DVB S2 தொழில்நுட்ப செட் டாப் பாக்ஸை பயன்படுத்தலாம்.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சென்னையை தலைமையிடமாக செயல்படுகிறது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite              Insat4A@83.0E(C-Band)
Freq Rate           4054
Symbol Rate      13230
Polar                   Horizontal
Modulation        Mpeg4/Dvb s2
Mode                 Fta

26/03/2016

சீனாவின் முதல் சீ ஆர் ஐ( CRI CIBN CHINA TAMIL TV) சைனா தமிழ் பகுதி நேர இணைய தொலைக்காட்சி உதயம்

நண்பர்களே சீனா நாட்டில் வாழம் தமிழ் மற்றும் சைனா மக்களின் கலை மற்றும் பாரம்பாரியம்  ஆகியவற்றை விளக்கும் வகையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சைனா வானொலி நிறுவனமான  சி ஆர் ஐ யால் 1963ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வானொலி தான் சீ ஆர் ஐ தமிழ் வானொலி.தமிழ் மொழி நிகழ்ச்சிகளை தொய்வின்றி வழங்கி வருகிறது.இந்தியா மற்றும் இலங்கை மற்றும் பல நாடுகளுக்கும் தமிழ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறது.தினந்தோறும் 4 மணி நேரம் நிகழச்சிகள் ஒளிபரப்பாகிறது.இந்திய நேரப்படி தினந்தோறும் இரவு 7.30
மணியில் இருந்து 9.30 வரை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.இவ்வானொலி நிகழ்ச்சிகளை ஏஎம் வானொலி  அலைவரிசையான 31.35 மீட்டர் 957 கி.ஹெர்ட்ஸ் இருந்து 31.04 மீட்டர் 9665 கி ஹெர்ட்ஸ் முலம் நிகழ்ச்சிகளை கேட்கலாம்.இலங்கை நாட்டில் பன்பலை அலைவரிசை 97.9 யில் பிற்பகல் 1.30 முதல் 3.30 வரை நிகழ்ச்சிகளை கேட்கலாம்.தற்சமயம் புதிய தொழில்நுட்பங்களின் முலம் சீனா மற்றும் மற்ற பல நாடுகளின் நிகழ்வுகளை தமிழ் நிகழ்ச்சிகளாக தொகுத்து சிஆர் ஐ சி ஐபிஎன் டிவி வழங்குகிறது.சீனா நாட்டில் தமிழ் தொலைக்காட்சி
தொடங்கப்பட்டு அவை பகுதி நேர ஒளிபரப்பு இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.தொலைக்காட்சியினை காண www.tamil.cri.cn என்ற தளத்தில் காணலாம்.ஐரோப்பா மற்றும் பல நாடுகளில் தமிழ் மொழி தொலைக்காட்சி மற்றும் வானொலி வளர்ந்து வரும் நிலையில் சீனா நாட்டில் தமிழ் தொலைக்காட்சி தொடங்கியிருப்பது வரவேற்க்கதக்கது.
தொகுப்பு : சதீஸ் சாட் தமிழ் தளம்

24/03/2016

ரிஸ்டி சினிபிளக்ஸ்,எக்ஸ் ஜீன் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு டிடிபீரி டிஷ்யில் தொடக்கம்

நண்பர்களே இந்தியாவின் இலவச டிடிஎச் சேவையான டிடி பீரி டிஷ்யில் இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான வியாகாம்18 கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இரண்டு புதிய தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு டிடி டிஷ் தொடங்கப்பட்டுள்ளது.ஹிந்தி திரைப்பட தொலைக்காட்சியான ரிஸ்டி சினிபிளக்ஸ் மற்றும் ஹிந்தி பாடல் 
தொலைக்காட்சியான எக்ஸ் ஜீன் ஆகிய இரண்டு தொலைக்காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது.இத்தொலைக்காட்சிகள் கட்டண தொலைக்காட்சிகளாக வியகாம்18 நிறுவனத்தின் இன்டல்சாட20 செயற்கைகோளில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.கடந்த வருத்தில் வியகாம்18 நிறுவனத்தின் ரிஸ்டி எண்டர்டெய்மென்ட் தொலைக்காட்சி ஒளிபரப்பு டிடி பிரி டிஷ்யில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டு இருந்தது.இது அந்நிறுவனத்தின் மூன்றாவது தொலைக்காட்சியாகும்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                      Gsat15@93.2E(Ku-Band)
Freq Rate                  11550
Symbol Rate              29500
Polar                          Horizontal
Modulation                 Mpeg4/Dvb s2
Mode                         Fta

13/03/2016

டிஸ்கவரி சேனல் மற்றும் சில புதிய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு இன்டல்சாட்12யில் தொடக்கம்

நண்பர்களே இலங்கை நாட்டின் முன்னனி டிடிஎச் நிறுவனமான டயலாக் டிடிஎச்யில் மேலும் புதிய தொலைக்காட்சிகளை இணைக்கும் வகையில் புதிய அலைவரிசையினை இன்டல்சாட்12யில் தொடங்கியுள்ளனர்.இவற்றில் முன்னனி தொலைக்காட்சியான டிஸ்கவரி சேனல் தொடக்க சோதனை 
தொலைக்காட்சியின் அடிப்படையில் ஒளிபரப்பு தொடக்கப்பட்டுள்ளது.கடந்த பல வருடங்களாக இலங்கையின் தமிழ் மற்றும் சிங்கள மக்களின் முன்னனி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமாக டயலாக் செயல்பட்டு வருகிறது.20 தொலைக்காட்சிகளுக்கான ஒளிபரப்பு இப்புதிய அலைவரிசையில் 
தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் மேலும் புதிய தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு தொடங்கப்படலாம்.டிஸ்கவரி சேனல் இலவச தொலைக்காட்சியாக இன்டல்சாட்12யில் ஒளிபரப்பாகிறது.ஒளிபரப்பு எவ்வித நேரங்களிலும் கட்டண தொலைக்காட்சியாக மாற்றம் செய்யப்படலாம்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                     Intelsat12@45.0(Ku-Band)
Freq Rate                  11510
Symbol Rate              27689
Polar                         Horizontal
Modulation                Mpeg4/Dvb s
Mode                        Fta