சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

13/11/2015

நீயூஸ்7(NEWS7 TAMIL) தமிழ் செய்திகள் தொலைக்காட்சி இன்டல்சாட்17@66.0eயில் புதிய அலைவரிசைக்கு மாற்றம்

நண்பர்களே தமிழ்நாட்டில் செய்திகள் தொலைக்காட்சிகளின் வரிசையில் புதிய 24 மணிநேர செய்திகள் தொலைக்காட்சி தொடங்கப்படவுள்ளது என கடந்த மாதத்தில் நமது தளத்தில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது நீயூஸ் 7 செய்திகள் தொலைக்காட்சிகான செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்17யில்(3966) அலைவரிசையில் சோதனை ஒளிபரப்பை
தொடங்கியுள்ளது.கடந்த சில வருடங்களாக ஐதராபாத் டெலிஷ்பாட் ஒளிபரப்பு முனையத்தின் முலம் செயற்கைகோள் ஒளிபரப்பை தமிழகம் மற்றும் ஆசியா நாடுகளுக்கு வழங்கி வந்தது.தற்சமயம் சென்னை டெலிஷ்பாட் ஒளிபரப்பு முனையத்தின் மற்றொரு அலைவரிசையில் இத்தொலைக்காட்சி செயற்கைகோள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது
இத்தொலைக்காட்சியை காண அதிநவின தொழில்நுட்பம் கொண்ட MPEG4/DVB S2 செட் டாப் பாக்ஸை பயன்படுத்த வேண்டும்.தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னலலை பெற குறைந்தபட்சம் 8 முதல் 10.12 அளவுள்ள டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.
புதிய அலைவரிசையின் விபரங்கள்:
Satellite                Intelsat17@66.0E(C-Band)
Freq Rate             3966
Symbol Rate        14400
Polar                     Horizontal
Moulation             Mpeg4/dvb s2
Mode                    FTA

12/11/2015

சாய்ராம் டிவி (SAIRAM TV) புதிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு தமிழகத்தில் இன்டல்சாட்17யில் உதயம்

நண்பர்களே தமிழகத்தின் புதிய பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சி சாய்ராம் டிவி என்ற பெயரில் உதயமாகியுள்ளது.சாய்ராம் டிவியின் முதல் செயற்கைகோள் ஒளிபரப்பு தமிழ் தொலைக்காட்சிகள் சங்கமிக்கும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.சென்னையை மையமாக கொண்டு செயல்படும் 
சாய்ராம் இன்ஸ்டியூட் கல்வி நிறுவனத்தின் சார்பாக இத்தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துர் சேனாங்கோட்டையில் செயல்படும் சாய்ராம் தொழிற்பயிற்ச்சிகூடமும் சாய்ராம் தொலைக்காட்சியின் அங்கமாகும்.சாய்ராம் டிவிக்கான செயற்கைகோள் ஒளிபரப்பு உரிமம் கடந்த வருடத்தில் வழங்கப்பட்டது.தொலைக்காட்சியின் 24 மணிநேர பொழுதுபோக்கு 
நிகழ்ச்சிகள் விரைவில் தொடங்கப்படலாம்.சாய்ராம் டிவியின் ஒளிபரப்பு டாடா கம்னியூகேஷன் நிறுவனத்தின் சென்னை டெலிஸ்பாட் ஒளிபரப்பு முனையத்தின் முலம் ஒளிபரப்படுகிறது.தொலைக்காட்சியி்ன் அலைவரிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் மிக எளிய தொழில்நுட்ப வசதி கொண்ட MPEG4/DVB S செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்த வேண்டும்.சாய்ராம் தொலைக்காட்சி இலவச தொலைக்காட்சியாக இன்டல்சாட்17 ஒளிபரப்பாகிறது.
அலைவரிசை விபரங்கள்
Satellite                  Intelsat17@66.0E(C-Band)
Freq Rate               3845
Symbol Rate          27689
Polar                      Vertical
Modulation            Mpeg4/Dvb s
Mode                     Fta

04/11/2015

பாக்ஸ் ஆக்ஸன் மூவிஸ் ஹெச்டி ஆங்கில திரைப்பட தொலைக்காட்சி இலவச ஒளிபரப்பு ஆசியாசாட்5@100.5E

நண்பர்களே பாக்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் சேனல்ஸ் நிறுவனத்தால் தெற்காசிய மற்றும் சீனா போன்ற நாடுகளுக்காக தொடங்கப்பட்ட ஆங்கில அதிரடி திரைப்பட தொலைக்காட்சியான பாக்ஸ் ஆக்ஸன் மூவிஸ் ஹெச்டி தற்காலிக இலவச தொலைக்காட்சியாக ஆசியாசாட்5 செயற்கைகோளில் 
ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் அனைத்தும் எவ்வித விளம்பர இடைவெளியின்றி ஒளிபரப்பாகிறது.அனைத்து பகுதிகளிலும் தொலைக்காட்சியின் செயற்கைகோள் அலைவரிசை சிக்னல் 6 மற்றும் 12 அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவில் கிடைக்கிறது.இத்தொலைக்காட்சியின் இலவச ஒளிபரப்பு எவ்வித நேரங்களிலும் இடைநிறுத்தம் செய்யலாம்.மிக துல்லியமான வீடியோ மற்றும் ஆடியோ தரத்தில் திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது.
அலைவரிசை விபரங்கள்
Satellite                 Asiasat5@100.5E(C-Bnad)
Freq Rate              4040
Symbol Rate         29720
Polar                     Horizontal
Modulation           HD.Mpge4/Dvb s2
Mode                     Fta/Pay

31/10/2015

சஹானா டிவி(SAHANA TV TAMIL MUSIC) புதிய தமிழ் மீயூசிக் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17@66.0Eயில் உதயம்

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது பாலிமா் தொலைக்காட்சி நிறுவனத்தின் புதிய மீயூசிக் தொலைக்காட்சியான சஹானா டிவி.இப்புதிய தொலைக்காட்சி கடந்த 
சில வருடங்களுக்கு முன்பு சோதனை ஒளிபரப்பை தொடங்கியிருந்தது.பின்பு செயற்கைகோள் ஒளிபரப்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டது.தற்சமயம் சோதனை ஒளிபரப்பை சென்னை டெலிஸ்பாட் ஒளிபரப்பு முனையத்தின் முலம் தொடங்கியுள்ளது. தற்சமயம் புதிய திரைப்பாடல்களுடன் ஒளிஉலா வரும் சஹானா டிவியின் 24 மணிநேர நிகழ்ச்சிகள் விரைவில் தொடங்கப்படலாம்.பாலிமா் டிவி நிறுவனம் தமிழகத்தில் தொடங்கிய 
முன்றாவது தமிழ் தொலைக்காட்சி இதுவாகும்.தொலைக்காட்சி MPEG4/DVB S2 தொழில் நுட்பத்தில் தொடங்கப்பட்டுள்ளது.இலவச ஒளிபரப்பாக சஹானா தொலைக்காட்சி இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                  Intelsat17@66.0E(C-BAND)
Freq Rate               3966
Symbol Rate          14400
Polar                      HORIZONTAL
Modulation            Mpeg4/dvb s2
Mode                     Fta

27/10/2015

தமிழகத்தின் புதிய கிருத்துவ தமிழ் தொலைக்காட்சி இன்சாட்4எ@83.0E யில் உதயம்.

நண்பர்களே தமிழகத்தின் புதிய கிருத்துவ தமிழ் தொலைக்காட்சி ஒன்று ராயல் டிவி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் பிரதான செயற்கைகோள் ஒளிபரப்பு இந்தியாவின் இன்சாட்4எ செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.இப்புதிய கிருத்துவ தமிழ் தொலைக்காட்சியின் பெயர் விரைவில் மாற்றப்பட்டு புதிய பெயரில்
ஒளிபரப்பாகும்.தற்சமயம் தமிழ் கிருத்துவ பாடல்களுடன் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.இத்தொலைக்காட்சியின் அலைவரிசையில் திருச்சி ஆக்ரோ ராயல் பார்ம்ஸ் நிறுவனத்தின் ராயல் தொலைக்காட்சி கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்தது.டெல்லி நியூஸ் 24 தொலைக்காட்சி நிறுவனத்தின் செயற்கைகோள் ஒளிபரப்பு முனையத்தின் முலம் தொடங்க்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் MPEG4/DVB S2 தொழில்நுட்ப செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்த வேண்டும்.இப்புதிய கிருத்துவ தமிழ் தொலைக்காட்சி சென்னையை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் கிருத்துவ ஆராதனை மற்றும் பல நிகழ்ச்சிக்ள தொடங்கப்படும்.

அலைவரிசை விபரங்கள்
Satellite               Insat4A@83.0E (C-Band)
Freq Rate            4133
Symbol Rate       11888
Polar                   Horizontal
Modulation          Mpeg4/Dvb s2
Mode                  Fta

07/10/2015

ஜெயா மேக்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் முதன்முறையாக இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி ஒளிபரப்பு

நண்பர்களே தமிழகத்தின் முன்னனி தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான ஜெயா டிவி குழுமத்தின் 24 மணி நேர மியூசிக் தொலைக்காட்சியான ஜெயா மேக்ஸ் முதன்முறையாக இந்தியாவில் நடைபெறும் 2015 ஆண்டுக்கான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி தொடர்களை தமிழ் வருணையுடன் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.இப்போட்டி தொடர்களை ஒளிபரப்புவதற்கான அனுமதியை இந்தியாவின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது.தமிழகத்தில் ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் முதன்முறையாக விளையாட்டு போட்டி 
தொடர்களை தனது தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது முதல்முறையாகும்.கடந்த சில வருடங்களாக தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளை ஒளிபரப்பி மக்களின் வரவேற்ப்பினை பெற்றுவருகின்றன.ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியை பொருத்தமட்டிலும் தமிழ் திரைப்பாடல்களை மக்களின் விருப்பத்திற்கேற்ப வழங்கி வரும் நிலையில் இப்புதிய முயற்ச்சியில் களம் இறங்கியுள்ளது தமிழ் கால்பந்து ரசிகர்களின் வரவேற்ப்பை பெறும் வகையில் அமைந்துள்ளது.ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் தங்களின் விளையாட்டு போட்டி தொடர்களை தமிழகத்தின் ஜெயா 
தொலைக்காட்சியுடன் ஒளிபரப்பு செய்வது இதுவே முதன்முறையாகும்.தமிழகத்தில் ஸ்டார் டிவி நிறுவனத்தின் தமிழ் தொலைக்காட்சியாக விஜய்டிவி செயல்படுவது குறிப்பிடதக்கது.கடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடர்களை தமிழ் வருணையுடன் தமிழகத்தில் ஒளிபரப்பியிருந்தது குறிப்பிடதக்கது.ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சி கட்டண தொலைக்காட்சியாக இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.போட்டிகளை கேபிள் மற்றும் டிடிஎச் முலமாக ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் காணலாம்.

03/10/2015

ராயல் டிவி(ROYAL TV TAMIL)தமிழ் தொலைக்காட்சி மீண்டும் ஒளிபரப்பை இன்டல்சாட்17 யில் தொடங்கியது

நண்பர்களே கடந்த வருடத்தில் திருச்சி ஆக்ரோ ராயல் டையரி பாா்ம்ஸ் நிறுவனத்தினரால் தமிழகத்தில் தொடங்கப்பட்ட ராயல்டிவி தமிழ் தொலைக்காட்சி மீண்டும் தங்களின் செயற்கைக்கோள் ஒளிபரப்பை தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஆந்திர 
மாநிலத்தின் தெலுங்கு தொலைக்காட்சியான ஆந்திரி வெல்நஸ் ஒளிபரப்பு உரிமத்தில்தொடங்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பு சாதனா  மற்றும் சக்தி டிவி ஹிந்தி தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமத்தின் முலமாக தமிழகத்தில் சில மாதங்களாக சோதனை தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வந்தது.பின்பு 
ஒளிபரப்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டுயிருந்தது.இலவச ஒளிபரப்பாக ராயல் டிவி இன்டல்சாட்17யில் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 8 அடி மேற்பட்ட சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.விரைவில் தொலைக்காட்சியின் 24 மணி நேர நிகழ்ச்சிகள் தொடங்கும்.தொலைக்காட்சியின் அலுவலகம் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆக்ரோ ராயல் டையரி பார்ம் நிறுவனமாகும்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                Intelsat17@66.0E(C-BAND)
Freq Rate              3876
Symbol Rate        14300
Polar                    Horizontal
Modulation          Mpeg4/Dvb s2
Mode                   Fta