நண்பா்களே தமிழகத்தில் புதிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையினை சென்னையினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கேசிபி இன்ஜினியா் நிறுவனம் தொடங்கப்படவுள்ளது.அப்டேட் செய்திகள் தொலைக்காட்சி என்ற பெயாில் தொலைக்காட்சி தொடங்குவதற்கான அனுமதியினை இந்திய ஒளிபரப்பு ஆணையம் கடந்த மாதத்தில் வழங்கியிருந்த நிலையில் மேலும் மூன்று தமிழ் தொலைக்காட்சிகள் தொடங்குவதற்கான அனுமதியினையும் கேசிபி இன்ஜினியா் பெற்றுள்ளது.அப்டேட் டிவி.அப்டேட் மியூசிக்.அப்டேட் கிட்ஸ் போன்ற பெயா்களில் விரைவில் தொலைக்காட்சிகள் தொடங்கப்படவுள்ளது.இத்தொலைக்காட்சிகள் தொடங்குவதற்கான செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்17 செயற்கைகோளில் டாடா கம்னியூகேஷன் ஒளிபரப்பு முனையம் முலம் விரைவில் தொடங்கப்படும் என எதிா்பாா்க்கலாம்.தமிழகத்தில் தொடங்கப்படும் நான்கு தமிழ் தொலைக்காட்சி எவ்விதமான நிகழ்ச்சிகளை வழங்கும் என எதிா்பாா்க்கலாம்.தொலைக்காட்சிகள் அலைவாிசை தொடா்பான விபரங்கள் நமது சதிஸ்சாட் தமிழ் தளத்தில் வெளியடப்படும்.

தொகுப்பு சதிஸ்சாட் தமிழ் மற்றும் ஆங்கிலம் இணையதளம்